காதல் என்பது சுகமான நரகம், சாவதற்கு முடிவெடுத்த பின் காதல் சரியான தேர்வு தான் என்றெல்லாம் பலரும் காதலை பல விதத்தில் வர்ணிப்பார்கள்.
காதல் என்ற உணர்வு வரும் வரை அதன் முக்கியத்துவம் பற்றி யாரும் அறிவதில்லை. காதலித்தவர்கள் மட்டுமே அந்த உணர்வை அறிவார்கள்.
சரி சில பெண்களுக்கு காதலர்கள் என்ன நண்பர்களே இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று நமது ஆய்வுக் கூடம் ஆராய்ந்து ஒரு சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளது. அவர்களது சில நடவடிக்கைகள்தான் காதலில் சிக்காமல் இருப்பதற்குக் காரணம் என்பதை நமது ஆய்வு நிரூபித்துள்ளது.
சரி ரம்பம் போடாமல் விஷயத்திற்கு வருவோம்.
பெண்கள் இயல்பாக இருந்தாலேப் போதும் என்பதுதான் எங்களது முதல் கருத்து. அதாவது, அதிகமான அலட்டலும், கூச்சமும் தேவையற்றது. இயல்பான மிதமான பேச்சு, இயல்பான சிரிப்புத்தான் அனைவரையும் கவரும்.
உங்களுக்கு ஏற்ற உடையைத் தேர்ந்தெடுத்து அணியுங்கள். அழகாக இருக்கிறதே என்பதற்காக உங்களுக்கு கொஞ்சமும் பொருந்தாத ஆடைகளை அணிவது மற்றவர்களுக்கு உங்கள் மேலான எண்ணத்தைக் குறைக்கும்.
எல்லோருடனும் நட்பாகப் பழகுங்கள். அதிகமாகப் பேசி நேரத்தை வீணடிப்பதும் வேண்டாம். மற்றவர்கள் உங்களை சிடு மூஞ்சி, உம்மனா மூஞ்சி என்று பட்டம் சூட்டவும் வேண்டாம். காலையில் ஒரு ஹாய் மாலையில் ஒரு பாயாவது உங்கள் வாயில் இருந்து உதிர்ந்தால் அழகாக இருக்கும்தானே.
ஒரு சில பெண்கள் ஏதேனும் நிகழ்ச்சிக்குச் சென்றதும் ஓரமா ஒரு இடம் பார்த்து உட்கார்ந்து கொள்வார்கள். அவர்கள் இருக்கும் இடத்திற்கு எல்லோரும் வந்து பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அது தவறு. உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் நீங்களேச் சசென்று நலம் விசாரித்து, தெரியாதவர்களுடன் அறிமுகம் ஆகிக் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் இயல்பாகப் பழகும் பெண்ணைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.
பேசு பேசு என்றதும் கண்டபடி போய் பேசி விட வேண்டாம். சாதாரண கிண்டல்கள், நக்கல்கள், செய்திகள் பரிமாற்றம் போன்றவை மட்டும் இருக்கட்டும். மற்றவர்களைப் பற்றிய விமர்சனமோ குறைகளையோச் சொல்ல வேண்டாம்.
மற்றவர்களுடன் பேசும்போது அவர்களுக்குத் தெரியாத நபர்களைப் பற்றியோ, அவர்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத விஷயங்களைப் பற்றியோ அதிக நேரம் பேச வேண்டாம். அது சலிப்பை ஏற்படுத்திவிடும்.
புதிய நபர்கள் அறிமுகமாகும் போது முதலில் அவர்களை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். பின்னர் அவர்களுடனான நட்பை வலுப்படுத்துவதா அல்லது தொலைவில் வைத்துக் கொள்வதாக என்று முடிவெடுங்கள்.
யாராக இருந்தாலும் சரி ஒரு அளவோடு இருங்கள். நெருங்கிய நண்பர்கள் என்ற வளையத்திற்குள் குறைந்தபட்ச நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
நீங்கள் நீங்களாக இருங்கள். உங்களுக்காக மற்றவர்களையோ, மற்றவர்களுக்காக நீங்களோ மாற்றவோ, மாறவோ முயற்சிக்காதீர்கள்.
ஒவ்வொரு சிக்கலிலும் ஒரு பாடம் கற்றுக் கொள்ளுங்கள். எந்த பிரச்சினையயும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
நல்ல காதலியாகும் முன் நல்ல பெண்ணாக இருக்க முயலுங்கள்.