சிறு தவறுகளை சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளாவிடில் அவைகளே பெரிய பிரச்சினைகளுக்கு வித்திட்டுவிடும்.
இல்லற வாழ்க்கையில் கணவனோ அல்லது மனைவியோ அல்லது கணவன் மனைவி இணைந்தோ தியானம் மேற்கொள்ள பல்வேறு ஆன்மீக மார்க்கங்கள் உள்ளன.
இல்லறத்தில் சில்லரை பேதங்கள் அதிகம் ஏற்படவே செய்யும். ஆனாலும் அதிலிருந்து விடுபட்டு தம்பதிகள் ஒற்றுமையாக வாழ அவர்களுக்குள்ளே இயல்பான சில ஒற்றுமை உணர்வுகள் அவசியம்.
அப்படியான ஏழு அணுகுமுறைகளை கடைபிடிக்க வேண்டியது மிகமிக அவசியம். இதோ அத்தனையும் உங்கள் பார்வைக்கு.
இல்வாழ்க்கை என்பது கணவனும், மனைவியும் இணைந்து நடத்தும் ஒரு தெய்வீகத் தன்மை கொண்ட இனிய வாழ்க்கை.
உலகில் எத்தனையோ வகை ஜீவராசிகள் இருப்பினும், மனித குலத்திற்கேற்ற இறைவனால் அருளப்பட்ட ஒரு தெய்வீக மார்க்கம் தான் இல்வாழ்க்கை என்பது.
இல்வாழ்க்கை ஒரு தராசைப் போன்றது. தராசின் இரு தட்டுக்களும் சமமாக இருந்தால் தான் இல்லறம் இனிக்கும். இல்வாழ்க்கையை ஒரு வண்டியின் இரு சக்கரங்களாகப் பாவித்தால், இரு சக்கரங்களும் ஒரே சீராய் இயங்கினால் தான் வண்டி சரியான பாதையில் செல்வது போல், வாழ்க்கையும் சரியான பாதையில் செல்லும்.
இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர நம்பிக்கை தழைத்தோங்க வேண்டும். இந்த பரஸ்பர நம்பிக்கை எந்த சூழ்நிலையிலும் யாராலும் அசைக்க முடியாத தன்மை பொருந்தியதாக இருத்தல் வேண்டும். பரஸ்பர நம்பிக்கையின்றி மேற்கொள்ளும் வாழ்க்கையில் சிறுபிணக்குகள் தோன்றி னாலே அவைகள் பெரும் பிரச்சினைகளாக மாறி வாழ்க்கையை சூனியமாக்கிவிடும்.
1. பரஸ்பரஸ் நம்பிக்கை
காதல் திருமணம் செய்பவர்கள், திருமணத்திற்கு முன்பே ஒருவரையொருவர் புரிந்து கொண்டு பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வர். பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் செய்பவர்களும் தற்போதையகாலச்சூழலில் திருமணத்திற்கு முன்பே பழகும் வாய்ப்பு நேரிடுவதால் பரஸ்பர நம்பிக்கையை துளிர்விடச் செய்ய வேண்டும். இவ்வகையில் ஆண்கள் தங்களுக்கே உரிய ஆணாதிக்கத்தைப் பெண்கள் மீது பாய்ச்சக் கூடாது.
காதல் மணமாகவோ அல்லது பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாகவோ இருக்கட்டும், இரண்டு வகைகளிலும் ஒரு பெண் தன்னை ஈன்றெடுத்து, வளர்த்து, சகல சவுபாக் கியங்களையும் பெறச் செய்த பெற்றோர், உற்றார், உறவினர் அனைவரையும் ஒரே மூச்சில் உதறித் தள்ளிவிட்டு கணவன் என்ற ஒரு நம்பிக்கையில் தஞ்சம் புகுகிறாள். இந்நிலையில் கணவன் ஒரு ஆள் மட்டுமே அப்பெண்ணின் நம்பிக்கைக்குரிய முதல் நாயகன் ஆனால் அவள் கொண்ட நம்பிக்கையை விட அந்த ஆண் அவள் மீது ஒருபடி மேலாகவே நம்பிக்கை வைப்பது தான் நியாயமான ஒன்றாகும்.
கணவனே கண்கண்ட தெய்வம் எனபோற்றும் நமது கலாசாரத் தில் ஒரு பெண் இறைவனைவிட கணவனையே அதிகம் நம்புகி றாள் என்பது தான் உண்மை. இத்தகைய பரஸ்பர நம்பிக்கை வைத்தலே இல்வாழ்க்கையின் முதல் இனிய படியாக அமைகின்றது.
2. ஒளிவு மறைவின்மை
இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவியிடையே ஒளிவு மறைவு என்பது இருத்தல் கூடாது. மனைவியால் செய்யப்படும் எந்த ஒரு சிறிய நற்காரியமாகவே இருக்கட்டும்! அது கணவனுக்கும் தெரியும் வகையில் செய்தல் தான் உத்தமம். அதுமாதிரி கணவனும் அப்படியே நடந்து கொள்ள வேண்டும்.
இல்லற வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒரு வருக்கொருவர் சமம் என்பதை முதலில் தெளிவாக்கிக் கொள்ளல் வேண்டும். கணவன் மனைவி இருவருமே எந்த ஒரு செயலிலும் ஒருவருக்கொருவர் சகிப்புத் தன்மையைக் கையாளல் மிகமிக நன்று.
மனிதன் என்று பிறந்து விட்டால் பொதுவாக யாராக இருந்தாலும் வாழ்க்கையில் சிறுசிறு தவறு கள் செய்வது இயற்கை. மனதறியாமலேயே சிறிய தவறுகள் நடந்து விட வாய்ப்புகள் உள்ளன. சிறுசிறு தவறுகளை சகிப்புத்தன்மை யுடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்குடன் செயல்பட் டால் பெரிய தவறுகள் நேரிட்டாலும் அவை களை எளிதில் மூடிக் கவிழ்த்து விடலாம்.
3. சகிப்புத்தன்மை
சிறு தவறுகளை சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளாவிடில் அவைகளே பெரிய பிரச்சினைகளுக்கு வித்திட்டுவிடும். ஒருவருக்கொருவர் காட்டும் சகிப்புத் தன்மை பரஸ்பரம் அன்பைக் கூட்டுவதோடு அபிமானத்தை வெளிப்படுத்தும் சக்தியாக மாறும். ஒரு கணவன் தன் மனைவி தனக்கு என் னென்ன நன்மைகள் செய்தாள் என்பதை யும், ஒரு மனைவி தன் கணவன் தனக்கு என்னென்ன செய்தான் என்பதையும் பரஸ் பரம் மனதளவில் நினைத்தாலே போதும்…. உண்மையான சகிப்புத் தன்மை உரு வாகிவிடும்.
குடும்பத்தில் செயல்படும் இக்குணம் உற்றார், உறவினர் மற்றும் வெளிவட்டாரத் திலும் ஏற்படுவதால் பிறரிடம் அல்லது பிறர் மனதில் நாம் உன்னத நிலையை அடைய லாம்.
4. வேண்டாமே கோபம்
கோபம் என்றால் என்ன? கோபம் எதனால் வருகிறது? கோபம் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? நாம் கோபப்படுவதைப்போல் பிறர் நம்மிடம் கோபம் கொண்டால் விளைவுகள் என்ன? ஒரு மனிதன் சிறிதளவு கால அவகாசம் ஒதுக்கி தனிமையில் மேற்கண்ட கோபம் குறித்த கேள்விகளுக்கு விடைகளை சிந்தித் துப் பார்த்தால், தான் கோபம் கொள்ளநேரிடும் அனேக சூழ்நிலை களைத் தவிர்க்கலாம். தனக்குத் தானே கட்டளையிடும் `ஆட்டோ சஜசன்’ என்ற முறையில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில்
“நான் ஒருபோதும் எவரிடத்தும் கோபம் கொள்ளமாட்டேன்.
மனமே எதை நினைத்தும் கோபம் கொள்ளாதே” என்று சங்கல்பத்தை குறைந்தது 10 தடவை தன் மனதிற்குள் சொல்ல வேண்டும்.
ஓரிரு மாதங்கள் கழித்து தனது கோபப் படும் குணத்தை ஆராய்ந்து பார்த்தால் கண்டிப்பாக கோபம் கொள்ளும் தன்மை குறைந்து வரும். கணவன் மனைவியிடையே ஒருபோதும் எந்த ஒரு செயல் நிமித்தமும் கோபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு, கனிவான முறையில் பேசிப்பழகிட வேண்டும். கோபம் கொள்ளும் செயல் என்று ஒருசெயலை அல்லது ஒரு நிகழ்வினைக் கூட சுட்டிக் காட்டுதல் கூடாது.
கோபம் கொள்ளும் தன்மை எவர் ஒருவரி டம் அறவே இல்லையோ, அவரை குடும்ப மும், சுற்றத்தாரும் ஏன்? இந்த சமுதாயமே இனிய மனிதராக ஏற்றுக் கொள்ளும். அதன் மூலமே நாம் பல்வகையான பயன் களை அடைந்து வாழ்வில் ஏற்றம் பல பெறலாம்.
5. வீண் தம்பட்டம்
வீண் தம்பட்டம் என்றால் ஒருவருக் கொருவர் தன்னைப் பற்றியோ, அல்லது தன்னைச் சார்ந்தவர்களைப் பற்றியோ, வெட் டித் தனமாக பெருமை பேசிக் கொள்ளுதல் ஆகும். இல்லற வாழ்க்கையை நன்முறை யில் வாழ எத்தனிக்கும் கணவன் மனைவி யிடையே, எவரேனும் ஒருவர் கூட தன்னைப் பற்றியோ, தன் சுற்றம் சூழல் குறித்தோ வீணாக பெருமை பேசுதல் கூடாது.
இப்பழக்கம் ஒருவருக்கொருவர் இடையே தாழ்வு மனப்பான்மையை ஏற் படுத்த நேரிடும் இதுவும் குடும்ப சச்சரவுகள் ஏற்பட முதன்மை வாய்ப்பினை உருவாக்கும்.
ஒரு பெண்ணானவள் திருமணத்திற்குப் பின் தான் புகுந்த வீட்டை தன் வீடாகப் பாவித்து அங்குள்ளவர்களை தன் சுற்றத்தார் என்ற முதன்மை நிலையில் பாவித்தால், அந்த வீட்டில் உண் மையிலேயே அவள் “திருமகள்” என்ற நிலையை அடைவாள்.
மாறாக புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம், தான் பிறந்த வீட்டுக் கதையை பெருமைபட பேசினால் வீண் எரிச்சல் தன்மைக்கு ஆளாகநேரிடும்.
6. தியாகம்
இல்வாழ்க்கையில் கணவன் மனைவி இருவருமே எந்த அளவிற்கு தியாக மனப்பான்மையோடு வாழ்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களுக்கு பெயரும் புகழும் ஏற்படுவதோடு மன மகிழ்ச்சியும் ஏற்படும் என்பதில் எள்முனையளவும் ஐயம் இல்லை.
இல்லறத்தில் தியாக மனப்பான்மை என்பது சற்று வேறு பாடானதாகும். அதாவது கணவன் தன்னிடமுள்ள பொருளால் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன் மனைவியைச் சார்ந்தவர் களுக்கும் நண்பர்களுக்கும் உதவும் மனப்பாங்காகும்.
அவ்வண்ணமே மனைவிக்கும் இது பொருந்தும். கணவன் பிறருக்கு பொருளாதார ரீதியில் உதவிட நேரிடும் போது அதனை மனைவி தியாக மனப்பாங்கோடு ஏற்றுக் கொள்வதே இதன் உட்கருத்தாகும்.
மாறாக மனைவியானவள் தன் கணவன், அவன் சுற்றத்தார்க்கு செய்யும் உதவியைக் கண்டு எரிச்சலடைந்து அதனைத் தடுக்க முற்படுவதும், தன் சுற்றத்தார்க்கு செய்வது கண்டு இன்பமுறுவதும் முரண்பாடான ஒன்று. அவ்வண்ணமே கணவனுக்கும் இது பொருத்த முடையதாகும்.
பொருளாதார உதவி மட்டுமின்றி பல்வேறு வகை உதவிகளும் உபசரணைகளும் இதில் அடங்கும். இத்தகைய தியாக மனப்பான்மையோடு விளங்குவ தால் ஒருவனுடைய இல்லறத்தில் இன்பம் காணப்படுவது மட்டுமின்றி அவர்களைச் சுற்றி யுள்ள அனைத்து தரப்பினர்களாலும் போற்றப் படுவர்.
7. தியானம்
இல்லறம் இனியதாக அமைய மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தையும் அடிப்படை நிலையிலேயே மேற்கொண்டால் நன் மைகள் பல பயக்கும். இருப்பினும் மேற்கூறிய கருத்துக்களை மனதிற் கொண்டு செயல்பட ஒவ் வொரு மனிதனுக்கும்.. “தியானம்” என்ற நிலை பல வழிகளில் பயன்படுகிறது.
இல்லறத்தில் தியானம் என்றால் காவி உடை தரித்து கமண்டலம் கொண்டு காடாள வேண்டுமென்பதல்ல. இல்லற வாழ்க்கையில் கணவனோ அல்லது மனைவியோ அல்லது கணவன் மனைவி இணைந்தோ தியானம் மேற்கொள்ள பல்வேறு ஆன்மீக மார்க்கங்கள் உள்ளன.
மேற்படி தியான வகைகளில் மனதை ஆட்கொள்ளச் செய்வ தால் மனமானது ஒருமைப்படும். மனம் ஒருமைப்படும் போது வேண்டாத செயல்களுக்கும், ஒவ்வாத எண்ணங்களுக்கும் இடமளிக்காமல், ஒன்றுபடும் மனநிலையில் மன அமைதி மற்றும் நிம்மதி ஏற்படுகிறது.
குடும்ப அமைதி என்பது கணவன் மனைவியிடையே ஏற்படும் கூட்டான மனஅமைதியே மேற்படி நிலையினை தியானம் மூலம் அடையும் போது கணவன் மனைவிடையே பரஸ்பர நம்பிக்கை ஏற்பட்டு அவர்களுக்குள்ளே ஒளிவு மறைவு இல்லாத நிலை ஏற்படுகிறது. அதனால் ஒருவருக்கொருவர் கோபதாபங் களின்றி சகிப்புத் தன்மையுடன் கூடிய பாகுபாடு இல்லாத தியாகமனப்பாங்குடனான மனித நேயமிக்க மனிதர்களாகத் திகழ்வதால் அமைதி அதிகம் பெற்று இனிய இல்லறத்தைக் காணலாம்.
– டாக்டர் ரா. முருகேசன்-