மனிதர்களைப் போன்றே சாகச நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் புதுவிதமான மனித வடிவிலான ரோபோவை ஜப்பான் விஞ்ஞானியான “ஹிரோஷி இஷிகுரோ” தயாரித்துள்ளார்.
ஒஸாகா பல்கலைக்கழகத்தில் இன்டலி ஜென்ட் ரொபாடிக் ஆய்வக இயக்குநராக உள்ள இவர் தான் உருவாக்கியுள்ள எந்திர மனிதனை ஆண் போன்றும், பெண் போன்றும் உருவ மாற்றம் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளார்.
ஆணாக மாறும் போது அதை தனது உருவம் போன்று உடை அலங்காரம் மற்றும் முக அமைப்பை உருவாக்குகிறார். அதே ரோபோவை அழகிய பெண் போன்றும் உடை அலங்காரம் மற்றும் முக அமைப்பிலும் மாற்றம் செய்கிறார்.
ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் இந்த ரோபோவை இவர் அண்மையில் நியூயோர்க்கில் நடந்த சர்வதேச ரோபோ கண்காட்சியில் அறிமுகப்படுத்தினார்.
அத்துடன், தனது ரோபோவை வெளியே எடுத்துச் சென்று வீதியோரம் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டி வருவதோடு, இவர் பலவிதமான வடிவங்களில் ரோபோக்களை தயாரித்து பரிசோதித்தும் வருகிறார்.