Home » கொறிக்க... » புதிதாக மூன்று பூமிகள் கண்டுபிடிப்பு: நீர் இருப்பதற்கான வாய்ப்பும் அதிகம்

புதிதாக மூன்று பூமிகள் கண்டுபிடிப்பு: நீர் இருப்பதற்கான வாய்ப்பும் அதிகம்

earthசூரிய மண்டலத்திற்கு அண்மையிலுள்ள க்ளைஸி 667சி சுற்றுவட்டப்பாதையிலுள்ள நட்சத்திரமொன்றைச் சுற்றி வரும் கோள்களில் பூமியை ஒத்த 3 கோள்கள் உள்ளதாக ஆராய்ச்சயாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இக்கோள்களை ஹார்ப்ஸ் தொலைநோக்கி மூலம் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளனர்.

குக்கோள்கள் புவியிலிருந்து 22 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. க்ளைஸி 667சி சுற்றுவட்டப்பாதையில் உள்ள குறித்த நட்சத்திரம் சூரியனில் மூன்றில் ஒரு பங்கு அளவுடையதாம்.

இந்த நட்சத்தித்தைச் சுற்றி வரும் பூமிகளில் நிலவும் வெப்பநிலை காரணமாக அங்கு நீர் இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இக்கோள்களில் பூமியியைப் போன்று நிலப்பரப்பு காணப்படுகின்ற அதேவேளை பூமியை விட சுமார் 10 மங்கு வரை பெரியதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதானல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த 3 கோள்களையும் ‘சுப்பர் எர்த்ஸ்’ என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply