Home » கொறிக்க... » ஆன்மீகம் » கொடுத்தால்தான் கிடைக்கும்!

கொடுத்தால்தான் கிடைக்கும்!

variyarகிருபானந்த வாரியார் சுவாமிகள், சொற்பொழிவின் போது, தோளில் மாலை அணிந்தபடியே பேசுவது வழக்கம்.

ஒருமுறை திருவாரூரில் சொற்பொழிவு! அப்போது மேடையில் இருந்த வாரியார் சுவாமிகளுக்கு, மாலை அணிவிப்பதற்காக அன்பர் ஒருவர் வந்தார். ஏற்கெனவே சுவாமிகளின் கழுத்தில் மாலை இருந்ததால், தன்னிடம் இருந்த மாலையை அணிவிக்காமல் கையில் வைத்தபடியே நின்றார்.

இதைப் புரிந்து கொண்ட சுவாமிகள், தோளில் கிடந்த மாலையைக் கழற்றி, அருகில் இருந்தவரிடம் கொடுத்தார். உடனே இதற்காகவே காத்திருந்தவர் போல், விறுவிறுவென வந்து சுவாமிகளுக்கு மாலை அணிவித்தார் அந்த அன்பர்.

அப்போது கூட்டத்தினரைப் பார்த்து சுவாமிகள், ”எப்போதும் நம்மிடம் இருப்பதை எவருக்காவது கொடுத்தால்தான், அடுத்தவர்கள் நமக்குக் கொடுப்பார்கள்” என்றாராம்!

– அ. யாழினி பர்வதம், சென்னை-78

Leave a Reply