Home » இது எப்படி இருக்கு? » சத்திர சிகிச்சைகளின்றி இளமைத் தோற்றத்தை ஏற்படுத்தும் ‘ரப்பர் உதடுகள்’ : ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பு

சத்திர சிகிச்சைகளின்றி இளமைத் தோற்றத்தை ஏற்படுத்தும் ‘ரப்பர் உதடுகள்’ : ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பு

lips1சத்திர சிசிக்சைகள் இன்றி இளமையான தோற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ரப்பர் உதடுகளை ஒத்த சாதனமொன்றினை ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இப்புதிய கண்டுபிடிப்பினை ஜப்பான் ட்ரென்ட் சொப் என்ற நிறுவனமே உருவாக்கியுள்ளது.

இந்த ரப்பர் உதடுகளை வாயில் பொருத்தி உயிரெழுத்துக்களை தினமும் சுமார் 3 நிமிடங்களுக்கு கண்ணாடி முன் நின்று உச்சரிக்க வேண்டுமாம். இவ்வாறு செய்யும் போது முகத்திலுள்ள சுருக்கங்கள் மறைந்து முகம் பொலிவடைந்து இளமைத் தோற்றத்ம் கிடைக்குமாம்.

எனவே இச்சாதனத்தின் மூலம் சத்திர சிகிச்சைகள் எதுவுமின்றி முகத்தினை இளமையான தோற்றத்திற்கு கொண்டு வரலாம் என மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.
lips2

Leave a Reply