தெருவில் நடந்துகொண்டு இருந்த நான், ஒரு வீட்டு வாசற்படியில் பணக்காரக் குடுகுடு கிழவி ஒருத்தி, ஜாலியாகச் சுருட்டு பிடித்துக் கொண்டு ரிலாக்ஸ்டாக சாயந்திர நேரத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பதைக் கண்டேன்.
ஆஹா! வயசான காலத்தில் இந்த கிழவிக்குத்தான் எத்தனை சொகுசு… எத்தனை சுகம்… எத்தனை மகிழச்சி!
அவளை நெருங்கி, அம்மணி! தங்களுடைய மகிழ்ச்சியின் ரகசியம் என்ன? என்று கேட்டேன்.
அவள் சொன்னாள்… தினமும் நாலு பாக்கெட் சிகரெட் குடிக்கிறேன். அப்புறம் படுக்கப் போகும் முன் கஞ்சா இழுக்கிறேன். அது தவிர, வாரத்தில் குறைந்தது நாலு நாளாவது முழு பாட்டில் சாராயம் அடிக்கிறேன். சாப்பாட்டைப் பொறுத்தவரை, எனக்குத் தள்ளுபடி என்று எதுவும் கிடையாது. ஊர்வன, பறப்பன, நடப்பன, குதிப்பன எல்லாவற்றையும் உள்ளே தள்ளுவேன். சொல்ல மறந்துட்டேனே… தேகப் பயிற்சி என்று எதையும் நான் செய்யறது கிடையாது!
‘‘நிஜம்மாவா?’’ ஆச்சர்யத்தில் நான் கூவியே விட்டேன். இப்போ உங்க வயசு என்ன, ஒரு எண்பது இருக்குமா?
விளையாடறியா… இருபத்து நாலுதான்!