ஒரு எறும்பு ஓரிடத்தில் சர்க்கரை இருப்பதை உணர்ந்தால், சுயநலமாக அப்படியே சாப்பிட்டு விடுவதில்லை.
சர்க்கரை இருக்கும் இடத்திற்கு மேலும் பத்து, பதினைந்து எறும்புகளை சேர்த்துக் கொண்டு வந்து உண்ண ஆரம்பிக்கும்.
எறும்பு போன்ற மிக சிறிய உயிர்களும் கூடத் தாராளமான மனதுடன் இருப்பதைப் பாருங்கள்….
நாம் எறும்பை விட “உயர்ந்த பிறவி” என்று எண்ணினால் மட்டும் போதாது.
அதற்கான உயர்ந்த குணமுடையவர்களாகவும் இருக்க வேண்டும்…