நீங்கள் பழகிக்கொண்டிருக்கும் நபர் உங்களிடம் ஐ லவ் யூ சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லையா?
நீங்களும் அதை ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?
காதலிக்கத் தொடங்கும் முன் உங்களுக்கு சில முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்.
நண்பராக இருக்கும் வரை ஆண்களது குணம் வேறாக இருக்கும். காதலராக மாறியதும் குணமும் மாறும். எனவே அவர் நண்பராக இருக்கும் போதான குணங்களைக் கண்டு நல்லவர் என அவசரப்பட்டு மனதைப் பறிகொடுத்து விடாதீர்கள்.
அவரைக் காதலராக ஏற்கலாம் என்று உங்கள் மனப்பட்சி சொல்லி விட்டதா? ஆசையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக அவரது குடும்ப விவரங் களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
காதல் திருமணத்தைப்பற்றி அவரது குடும்பத்தாரின் அபிப்ராயம் என்ன என்பதையும் மறைமுகமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களவரை சந்திக்கச் செல்லும்போது மேக்கப், கவர்ச்சியான உடை என எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளை தவிர்த்து விடுங்கள். இயல்பாகவே இருங்கள்.
உங்கள் காதலர் நம்பர் ஒன் நல்ல நண்பராகவே இருக்கட்டும். ஆனாலும் எந்தச் சூழ்நிலையிலும் அவர் தனியே அழைக்கும் எந்த இடங்களுக்கும் தனியே போகாதீர்கள்.
தனிமையும், இளமையும் எப்பேர்ப்பட்ட நல்லவரையும் மோசமாக்கலாம், ஜாக்கிரதை!.