ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன்.
பந்தியில் கூட்டம் குறைந்ததும் சாப்பிட உட்கார்ந்த போது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்த ஞாபகமாக இருந்தது.
“உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…!” என்று கேட்டேன்.
“அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…” என்றார் அவர்.
ஞாபகம் வந்துவிட்டது. சாப்பிட்டபின் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்புகையில்…
“ஏங்க மொய் வைக்கலே…” கேட்டேன் அவரிடம்.
அவர் சொன்னார்,
“அட… மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல… நான் ஏன் மொய் வைக்கணும்?”
-முஹம்மது மாலிக் சோழபுரம்