அவள்தான் மனைவி
அவள்தான் பெண்
பட்டுச்சேலை- குடும்பம்!
சொட்டுக்கண்ணீர்- அதில்!
சொட்டுத் திராவகம்!
கண்டதெற்கெல்லாம்
கண்ணீர் விடும் மனைவி
கனவனைத் தனது
கண்ணீரால் நனைந்த
உடைபோட்டு- வெளிக்
கடைவீதி அனுப்புவாள்!
மணமான புதிதில்- என்
மனைவியும் அப்படியே!
வாய்ச்சொல்
வாயில் இரக்க
வழிந்தோடும்
நதிக் கண்ணீர்!
கைக்குழந்தை சில நேரம்
கண்ணீர் விட்டு அழும்
காரணம்- புரியாது!
கையில் கிடப்பதைக்
காட்டி மயக்குவோம்!
புட்டிப் பால் எடுத்து
ஊட்டிப் பார்ப்போம்!
தொடர்ந்து அழுது
கொண்டிருக்கும்
தொட்டில் பிள்ளை- நம்முடி
கொட்டிப்போகும் அளவு
கொட்டிடும்- கண்ணீர்!
கண்ணீர் விடுவதில்
கைப்பிள்ளை- என் மனைவி
ஏன் அழுகிறாய் என்று
எழுபது முறை கேடபினும்
எழுபத்தி ஒரு வினாடியும்
எதுவும் கூறாத ‘மவுனம்”
ஓங்கிக் குரல் கொடுத்தால்
‘ஒன்றுமில்லை’- பதில்!
ஒன்றுமில்லாததற்கு ஏன்
ஓயாது அழுகிறாள்?
அவ்ள்தான் ‘மனைவி”
அவள்தான் ‘பெண்”!
ஒருநாள் ‘ஒன்று”
சொன்னேன்!
மறுநாள் கண்ணீர் இல்லை!
அந்தக் கமுக்க- ரகசியம்
இந்த உலகமும் அறியட்டும்!
‘அம்மா! தாயே! நீ
அழுது கண்ணீர் விட்டால்
அலுவலகம் செல்லும் போது
அலைபாயும் நெஞ்சு!
நடுங்கிய மனதுடன்
நடுவீதி நடப்பேன்!
ஓடும் வண்டி- என் மீது
ஏறினாலும் ஏறும்!
அலுகலகத்தில்- என்
அலுவல் நடக்காது!
மேலதிகாரி- என்
வேலையைக் கிழிப்பார்!
வீட்டில் நீ விடும் கண்ணீர்- என்னை
வீட்டுக்கு அனுப்பிவிடும்!
செல்லும் காரியம்- எல்லாம்
செல்லாது ஆகிவிடும்!
சிரித்து நீ அனுப்பினால்- நான்
செழித்து வீடு வருவேன்!
அழுது நீ அனுப்பினால்- நீ
அழும்படி வீடு வருவேன்!
கேட்பது எதுவாயிருந்தாலும்
கேவி அழாமல் கேள்!
சொல்வது எதுவாயிருந்தாலும்
‘சொட்;டு” இல்லாமல் சொல்!
கண்ணீரை- இனி உன்
கண்ணில் கண்டால்
மண்ணின் வாழ்க்கை- என்
மனது விரும்பாது!
கண்ணீர் விடுவதற்கோ
கன்னி- உன்
கை தொட்டேன்?
குமுறி அழுவதற்கோ
குமரி- உனைக்
கொண்டு வந்தேன்?
ஒவ்வொரு துளிக் கண்ணீரும்
ஒவ்வொரு துளைக் காயம்- அம்மா!
காயம் படாமல் நான் வாழ- உன்
கண்ணீரைத் துடைத்து விடு!
கண்ணில் இட்ட ‘மை”- உன்
கண்ணீரில் நனையாமல்
மண்ணில் வாழ்வேன்- இல்லையேல்
விண்ணில் ஏறிடுவேன்!
அடியார்-