Home » குட்டிக்கதைகள் » விதி

விதி

நுனிக்கிழையில் உட்கார்ந்து கொண்டு, அடிக்கிளையை வெட்டிக்கொண்டிருந்தான் ஒரு அறிவிலி!

அவன் விதி முடிந்துவிட்டது. எனவேதான் அவன் அறிவு மங்கி இப்படி செய்கிறான்’ என்றார் சிவபெருமான்!

‘பாவம்.. அவனைக்காப்பாற்ற கொஞ்சம் முயற்சிக்கலாமே… அழித்தல் மட்டும் அல்ல உங்கள் கையில் ஆக்கலும், காத்தலும் இருக்கிறதே’ என்றாள் தாயுள்ளம் கொண்ட அன்னை பார்வதி!

‘சரி…அவன், கிளையை வெட்டி முடித்து கீழே விழும்போது, ‘அம்மா’ என்று அபயக்குரல் கொடுத்தால் நீ போய் காப்பாற்று!
‘அப்பா’… என்றால், நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார் சிவபெருமான்.

ஆனால், அவன் கீழே விழும்போது ‘ஐய்யோ…ஐய்யைய்யோ…’ என்று மிரண்டு கத்தி சிவனையும், பார்வதியையும் ‘அச்சச்சோ’ என்று சொல்ல வைத்துவிட்டான்.

Leave a Reply