Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » உஷ்… குழந்தைகளிடம் சொல்லாதீங்க..!

உஷ்… குழந்தைகளிடம் சொல்லாதீங்க..!

குழந்தைகளிடம்… பேசக் கூடாத… சொல்லக் கூடாத விஷயங்கள் சில உள்ளன. அவற்றை இங்கே பார்ப்போம்,
 
ஒப்பீடு செய்வது கூடவே கூடாது. குழந்தைகளை உடன் பிறந்தவர்கள் அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது கூடாது. இதனால் குழந்தைகளுக்கு மனபலம் குறையும். எந்த குழந்தையுடன் ஒப்பீடு செய்கிறோமோ… அந்த குழந்தைகளை எதிரியாக பார்ப்பார்கள். இதனால் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படும். சகோதர, சகோதரிக்குள் ஒப்பீடு செய்வதால் சின்ன வயதிலிருந்தே அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு விடுகிறது.

இதற்கு காரணம் பெற்றோர்தான். சிலர் பெரியவர்களாக வளர்ந்த பின் னரும் ஒன்று சேராமலே இருப்பார்கள். குழந்தைகளிடம் இருக்கும் குறை களை சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக அவர்களின் நல்ல எண்ணங்களை, செயல்பாடுகளை சொல்லி அவர்களை ஊக்குவிப்பது நல்லது. உதாரண மாக ஒரு வீட்டில் 15 வயதில் ஒரு சிறுமியும், 5 வயதில் ஒரு சிறுமியும் இருந்தால்… அதில் 15 வயது சிறுமியைப் போல் 5 வயது சிறுமியின் பேச்சு, செயல் ஒன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. பெற்றோர்கள் குழந்தைகளிடம், “நீ ஏன் அப்படி பேசவில்லை… அதை ஏன் கேட்கவில்லை” என்று குழந்தைகளை பெரியவர்களாய் நினைத்து பேசக் கூடாது. குழந்தைகளை குழந்தைகளாய் நடத்தினால் போதும்.

குழந்தைகளிடம் எரிச்சலாக பேசுவது கூடாது. “என்னை ஏன் எப்பவும் தொந்தரவு பண்றே…” இப்படி பல தாய்மார்கள் குழந்தைகளிடம் பேசுவது உண்டு. எந்த வேலையாக இருந்தாலும், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகள் உங்களிடம் வருவது உங் களுடைய ஆதரவு, அரவணைப்புக்காகத் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப் படி நெருங்கும்போது எரிச்சலாக பேசுவதால் குழந்தைகளுக்கும், உங்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகி விடும். பெற்றோரிடம் முழுமையான அன்பு கிடைக்காமல் பயம் உருவாக ஆரம்பித்துவிடும். எதிர்காலத்திலும் இந்த பயம் தொடரலாம்.
 
பரபரப்பாக வேலை செய்தாலும், டென்ஷனாக கோபத்தில் இருந்தாலும் எரிச்சல் காட்டாமல் குழந்தைகள் நெருங்கி வரும் சமயத்தில் அவர்களுக்கு பக்குவமாக பேசுவது நல்லது. இதனால் குழந்தைகளுக்கு சூழ்நிலையை புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.

தவறான அறிமுகம் என்பதும் குழந்தைகளிடம் கூடாது. ஒவ்வொரு பெற்றோரும் ஒவ் வொரு குழந்தை மீதும் ஏதாவது ஒரு லேபிளை ஒட்டிவிடுகிறார்கள். இவன் பாடத்தான் லாயக்கு, இவன் ஓவியன்… இவன் டான்ஸ்தான்… என்று தாங்கள் கணிக்கும் விஷயத்தை பிள்ளைகளிடம் திணிக்க முயற்சிப்பார்கள்.

அதே மாதிரி பக்கத்து வீட்டுக் குழந்தைகளை புகழ்ந்து பாராட்டுகின்றனர். இது மிகப் பெரிய தவறு. இப்படி அடுத்தவர்களை புகழ்ந்து, நம்முடைய குழந்தைகளை மட்டம் தட்டுவ தால் அவர்களிடம் இருக்கும் சின்னச்சின்ன ஆற்றல்களும் முனை மழுங்கி விடும்.

உங்களுடைய குழந்தைகளிடம் இருக்கும் திறமையை புகழ்ந்து அவர்களை மேலும் மேம் படுத்தலாம். சின்ன குறைகள் இருக்கலாம். அதாவது சில குழந்தைகள் ரொம்ப நேரம் தூங்கலாம். சில குழந்தைகள் அலட்சியமாக இருக்கலாம். இதை மற்றவர்களிடம் சொல்லக் கூடாது.
குழந்தைகளிடம் சின்னச்சின்ன குறும்புகளும், விளையாட்டுத்தனமும் அதிகமாக இருக் கும். குழந்தைகள் என்றாலே அப்படித்தான். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் குழந்தைகள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அந்த மாதிரியான நேரங்களில் அவர்களின் மனம் நோகும்படி பேசக் கூடாது.

குழந்தைகளிடம் அவர்களின் அப்பாவை மட்டம் தட்டிப் பேசுவது கூடவே கூடாது. குழந்தைகள் எதாவது தவறு செய்யும்போது. “உன்னோட வயசில… உங்கப்பாவும் இப்படித்தான் பண்ணினாராம்.” என்று பேசுவது மிகவும் அபத்தமான விஷயம். இதனால் குழந்தைகள் செய்யும் தவறுகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது போல் ஆகிவிடும். மேலும் தவறுகளை செய்யலாம் என்ற நினைப்புடன் செயல்படுவார்கள். ஆனால் குழந்தைகள் செய்யும் நல்ல செயல்களுக்கு பெரியவர்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

குழந்தைகளை பயத்தினால் மிரட்டுவதும் கூடாது. இதை செய்தால் `பேய் வந்து புடிச்சிட்டு போயிடும், பூச்சாண்டி வருவான்’ என்றெல்லாம் சொல்லுவதால் அவர்களும் அதை உண்மை என நம்பி மிரண்டு விடுவார்கள். எதிர்காலத்தில் அவர்கள் எதற்கெடுத்தாலும் பயப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்!

-தினத்தந்தி-

Leave a Reply