Home » குட்டிக்கதைகள் » உற்சாகம்!

உற்சாகம்!

கட்டடம் ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார்கள். அங்கே வந்த ஒருவருக்கு ஒரு காட்சி வித்தியாசமாகப்பட்டது.

எல்லாத் தொழிலாளிகளும் அலுப்புடன் எரிச்சலாய் வேலை செய்து கொண்டிருக்க… ஒரு தொழிலாளி மட்டும் உற்சாகமாய் சந்தோஷமாய் வேலை செய்து கொண்டிருந்தான்.

பார்த்தவருக்கு ஆச்சரியம்.

‘‘ரொம்பக் களைப்பா இருக்கா? இவ்வளவு அலுப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறீர்களே?!’’

அலுப்புடன் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் கேட்டார் வந்தவர்.

‘‘என்ன செய்யறது? நான் முழுசும் இப்படி செங்கல்லை அடுக்கிக்கிட்டே இருந்தா அலுப்பா இருக்காதா?’’ என்று எரிச்சலாய் பதில் சொன்னார்கள் அவர்கள்.

சற்றுத்தள்ளி உற்சாகமாய் வேலை பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ‘‘எப்படிப்பா இவ்வளவு உற்சாகம்?’’ என்றார். 

அவனிடமிருந்து சட்டென்று பதில் வந்து விழுந்தது.

‘‘எவ்வளவு பெரிய கட்டடத்தைக் கட்டிக் கொண்டு இருக்கிறேன். கட்டி முடித்ததும் பாருங்க, எவ்வளவு அழகா இருக்கப் போகுதுன்னு. அந்த உற்சாகம்தான்.’’ என்றார்.

Leave a Reply