எங்கே எப்போது பிறந்தீங்க : கர்நாடக மாநிலம் மங்களூரில் எழுபத்து மூன்றாம் வருடம் செப்டம்பர் ஒண்ணாம் தேதி எங்க வீட்டு கடைக்குட்டிப்பெண்ணாக பிறந்தேன்.
குடும்பம் : அப்பா கிருஷ்ணராஜ் ரொம்ப அன்பானவர். அம்மா விருந்தாராய் அமைதியானவங்க. சகோதரர் ஆதித்யாராய் பாசமானவர்.
உயரம் : 5 அடி 7 அங்குலம்
ராசி : விருச்சிகம்
தாய்மொழி : துலு
பிடித்த பாடம் : உயிரியல்
பேசத்தெரிந்த மொழிகள் : ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், கன்னடம், உருது.
சந்தோஷம் : 1994ல் உலக அழகி பட்டம் பெற்றது.
ஆதங்கம் : முதன்முதலில் டிவி தொடர்களுக்கு டப்பிங்குரல் கொடுக்கச் சென்றபோது நிராகரிக்கப்பட்டது.
பெட் அனிமல் : ‘ஷன் சைன்’ என் செல்ல நாய்குட்டி.
பெஸ்ட் ப்ரெண்டு : ப்ரீத்தி ஜிந்தா
பிடித்த கார் : மெர்சிடெஸ்
பிடித்த உணவு : கொழுப்பில்லா, எண்ணெயில்லா எல்லா உணவுகளும் பிடிக்கும்.
பிடித்த திரைப்படம் : கெசபிளான்கா.
எதன் மீது காதல்? உண்மையின் மீது, குடும்பத்தின்மீது, நண்பர்கள் மீது, நேர்மையின் மீது, வலிமையின்மீது அப்புறம் சாக்லெட் மீது எனக்கே தீராத காதல் உண்டு.
எதைக் கண்டு பயம்? வதந்திகளையும், கிசுகிசுக்களையும் கரப்பான்பூச்சியையும் கண்டால் பயம் வரும்.
கனவு நாயகன் : நான் உண்மையை நிஜத்தை மட்டுமே நம்புவதால் கனவு காண்பதில்லை.
பலவீனம் : கஷ்டப்படுபவர்களை பார்த்ததும் மனம் பதறுவது.
பலம் : என்னுடைய தன்னம்பிக்கை விடாமுயற்சி.
உங்களிடம் உங்களுக்கு பிடித்தது: உண்மையாக இருப்பது எதற்கும் வளைந்து கொடுக்காத பிடிவாதத்தன்மையோடு இருப்பது.
பிடித்த பொன்மொழி : அழகு என்பது முக்கியமானதுதான். ஆனால் அழகே முக்கியமான விஷயம் இல்லை.
பிடித்த நிறம் : வெள்ளை மற்றும் நீலம்.
பிடித்த நடிகர் : திலீப்குமார், ராஜ்கபூர்.
உங்களைப் பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது? : நான் சாதாரணமானப் பெண் அதிலும் ஒரு சராசரி பெண்ணின் மனநிலையில் உள்ள பெண்.
ரசிகர்களிடம் சொல்ல விரும்புவது : வாழ்க்கை ஒரு நாடகம். அதில் நாம் எல்லோரும் ஒரு பாத்திரங்கள். அதனால் உங்கள் பாத்திரத்தை நீங்கள் சிறப்பாக செய்யுங்கள். வெற்றி தானே உங்களைத் தேடி வரும்.
-குருஜி-