அடி, உதை, குத்துக்கு…
உடம்பு வலித்தும்
உள்ளம் வலிக்கவில்லை…
பேரப்பிள்ளைகளின் செல்லம்?
-உசேன்-
பெண் தெய்வம்
பயந்து ஓடுகிறது
எதிரே
போலிச்சாமியார்!
– ஆர்.ஜெயசீலன், மன்னார்குடி-
அவளுடைய
இதழ்களும் குறள்தானோ?
இரண்டே வரியில்
எத்தனை பாடங்கள்…?
– நெ.இராமன், சென்னை-74-
அப்பா இறப்பிற்கு
சிரித்தபடி அம்மா
புகைப்படத்தில்!
– நா.திங்களன்-
உனக்கு
கவிதை எழுத தெரியுமா
என்றாய்
தெரியாது ஆனால்
பார்த்து கொண்டிருக்கிறேன்
என்றேன்.
– நா.கோகிலன், சென்னை-93
அன்பே
தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை
இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை.
– நா.திங்களன்-
என்ன வேண்டுதலோ…
மொட்டை போட்டது மரம்
இலையுதிர் காலம்!
– இரா.ஆதிநாராயணன், தஞ்சாவூர்-9
அன்பு என்ற சொல்லுக்கு
அர்த்தம் கேட்டு
அடித்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்.
– நா.திங்களன்-