`செக்ஸை’ விட `ஷாப்பிங்’கை அதிகமாக விரும்புகிறார்கள் பெண்கள். இதை நாம் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. ஓர் ஆய்வு கூறும் உண்மை. ஆண்கள் 52 நொடிகளுக்கு ஒருமுறை செக்ஸை பற்றி நினைக்கிறார்கள் என்றால், பெண்கள் 60 நொடிகளுக்கு ஒருமுறை `ஷாப்பிங்’கை பற்றி நினைக்கிறார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு.
ஆக மொத்தம், பெண்களுக்கு மிக மிகப் பிடித்தமான விஷயம் `ஷாப்பிங்’ என்பது உறுதியாகிறது. `ஷாப்பிங் ‘செய்யும் பெண்களிலும்’ 5 விதமாம்.
அவர்களைப் பற்றி…
`ஆசை’ப் பெண்கள்:
தனக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ, தள்ளுபடியோ, இலவசமோ இருக் கிறது என்பதற்காகவே பொருட்களை வாங்குபவர்கள் இவர்கள். இவர்கள் வீடுகளில் வித்தியாசமான பொருட்கள் நிறையக் குவிந்திருக்கும். பல பொருட்களை எப்போது வாங்கினோம் என்பதே இவர்களுக்குத் தெரியாது. பயன்படுத்தப்படாமலே கிடக்கும்.
இவர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடம்: `தள்ளுபடி’ பொருட்களைப் பற்றிய விவரங்களை அறிவது.
தவிர்க்க வேண்டிய விஷயம்: பல்வேறு `விற்பனைத் தந்திரங்களுக்கு’ நீங்கள் பலியாகாமல் இருப்பது. `சலுகை விலை’க் காகவே நீங்கள் ஒன்றை வாங்குகிறீர்கள் என்றால், தரம் குறைந்த ஒன்றை உங்கள் தலையில் கட்டிவிட்டார்கள் என்று அர்த்தம்.
`சிக்கன’ப் பெண்கள்:
ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருப்பார். அதற்காக கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்துக்கொண்டிருப்பார். அந்தப் பொருள் விற்கும் கடைக்கு அடிக்கடி போவார். தான் விரும்பும் சேலை, சுடிதார் அல்லது காலணியை ஏக்கத்துடன் பார்ப்பார். கற்பனையாக அணிந்து பார்த்து மகிழ்வார். கடைசிக் கடைசியாக ஒருநாளில் தனது `மனங்கவர்ந்த பொருளை’ வாங்குவார்.
கற்க வேண்டிய பாடம்:அறிவுப்பூர்வமான வாங்குபவராக இருப்பது. உங்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய பொருளாக வாங்குவது. உங்களுக்கு உண்மையிலேயே, தேவைப்படும் பொருளை வாங்கக் கற்பது.
தவிர்க்க வேண்டிய விஷயம்: ஒரே ஒரு பொருளுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பது.
`வாக்குவாத’ப் பெண்கள்:
ஓர் ஆடையைப் பார்க்கும் 65 சதவீத ஆண்கள் அதை உடனே வாங்கிவிடுகிறார்கள், பெண்களில் 25 சதவீதம் பேரே உடனே வாங்குகிறார்கள் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. பேரம் பேசும் `வாக்குவாத’ப் பெண்கள் கடை கடையாக ஏறி இறங்குவார்கள். தாங்கள் விரும்பும் பொருளிலேயே சிறந்ததைத் தேடுவார்கள். அதை எவ்வளவு விலை குறைக்க முடியுமோ அவ்வளவு அடித்துப் பேசிக் குறைத்து வாங்குவார்கள். ஒரு பொருள் எந்த இடத்தில் சிறந்ததாக இருக்கும் என்று அறிந்திருப்பார்கள். ஒன்றிரண்டு ரூபாய்க்காகவும் பலமணி நேரம் பேரம் பேசுவார்கள். ஆக, இவர்களும் `ஷாப்பிங்’கை பற்றி எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
கற்க வேண்டிய விஷயம்: தரமான பொருளைத் தேடிக் கண்டுபிடிக்கும் திறன். அதற்காக கடை கடையாக ஏறி இறங்கத் தயங்காமல் இருப்பது. தவிர்க்க வேண்டிய விஷயம்: `ஷாப்பிங்’குக்கு உடன் வருபவருடன் ஏற்படும் சச்சரவை. ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து 72 நிமிடங்கள் ஷாப்பிங்கில் செலவழித்தால் சண்டை வந்துவிடுகிறதாம்.
`செலவாளி’ப் பெண்கள்:
`பிராண்டட்’ பொருட்களை வாங்குவதில் மிகவும் பிரியமாக இருப்பார்கள் இவர்கள். தனது சந்தோஷத்தைக் கொண்டாட, நேசத்துக்குரியவர்களுக்கு வாங்கிக்கொடுக்க, புதிய கிரெடிட் கார்டை `பரீட்சித்து’ப் பார்க்க என்று கடைக்குப் போய்க்கொண்டே இருப்பார்கள். பிரபலமான நிறுவனம் என்றால் இவர்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்குவார்கள்.
கற்க வேண்டிய பாடம்: `பிராண்டட்’ பொருட்களை வாங்குவாதல் இவர்கள் பெரும்பாலும் நல்ல தரமான பொருட்களையே வாங்குவார்கள்.
தவிர்க்க வேண்டிய விஷயம்: வெறும் சந்தோஷத்துக்காகவே `ஷாப்பிங்’ செல்வது.
`அடிமை’ப் பெண்கள்:
அலுவலகம் முடிந்ததுமே அருகே உள்ள கடைக்குச் செல்வதை தவறாத வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் இந்தப் பெண்கள். `பிராண்ட்’ பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். `ஷாப்பிங்’கும் தவிர்க்க முடியாத போதைதான் இவர்களுக்கு.