1. குப்பை தேங்குவதேன், குழந்தை அழுவதேன்?
2. மலரை வண்டு தொடுவதேன், பலபேர் குடும்பம் கெடுவதேன்?
3. ரசம் மணப்பதேன், ரத்தம் வழிந்தோடுவதேன்?
4. மாவு ரொட்டியாவதேன், போர்க்களத்தில் பலர் இறப்பதேன்?
5. நாக்கு இனிப்பதேன், நாய் ஓடுவதேன்?
விடைகள்:
1. எடுப்பாரற்றறு கிடப்பதால்
2. மது
3. பெருங்காயம்
4. சுட்டதால்
5. கல்கண்டால்
ரா. கமலவதி, கரூர்-