Home » கொறிக்க... » ஆசை!

ஆசை!

கவிதை  பாடும்  கவிஞனுக்கு  கவியின்  மீது ஆசை.
ஓவியம்  தீட்டும்  ஓவியனுக்கு  ஓவியத்தில்  ஆசை.
சுpற்பம்  செதுக்கும்  சிற்;பிக்கு  சிலையின்  மீது ஆசை.
புலம்  பெயர்ந்த  எம்மவர்க்கு  ஈழம்  மீது ஆசை.

எம்  நாட்டின்  வயல்  வரப்பில்  சுற்றிவர ஆசை.
கதிர்  விளைந்த  நெல்  வயலில்  கிளி  கலைக்க ஆசை.
வேட்டி  தனை  மடித்துக்கட்டி  வண்டியோட்ட  ஆசை.
சந்தை  சென்று  பேரம்  பேசி  சாமான்  வாங்க  ஆசை.
 
சாமான்  வாங்கிய  மீதிக்காசில்  தேநீர்  பருக ஆசை.
வீடு  வந்து  மீதி  கேட்டு  திட்டு  வாங்க ஆசை.
கிணற்றிடி  சென்று  தண்ணீர்  மோந்து  தலையில்  வார்க்க ஆசை.
கமுகுää தென்னைää வாழைக்கெல்லாம்  தண்ணீர்  இறைக்க ஆசை.

மாலை  நேரம்  நண்பர்  கூடி சுற்றித்திரிய ஆசை.
சைக்கிள்  மீது  இருவர்  ஏறி  சேர்ந்து திரிய ஆசை.
கோவில், சினிமா, நாடகங்கள்  பார்த்துவர ஆசை.
இருக்கும்  பணத்தில்  பலதும்  வாங்கி  பகிர்ந்துண்ண ஆசை.

அப்பா, அம்மா  குடும்பமாக  குந்திப்  பேச ஆசை.
அக்கா, அண்ணா, தம்பியோடு  சண்டைபோட ஆசை.
விழாவின்  போது  வெடி  கொழுüத்தி  கூச்சலிட ஆசை.
ஆசை, ஆசை  நெஞ்சமெல்லாம்  பெரிய பெரிய ஆசை.
ஈழம்  பெற்றால்  இதுவெல்லாம்  சின்னச்சின்ன ஆசை!

-ரவிசெல்லத்துரை, சுவிஸ்-

Leave a Reply