அந்த இளைஞன் நன்றாக கார்ட்டூன்கள் வரைவான். தான் வரைந்த படங்களை எடுத்துக்கொண்டுபோய் பல இடங்களில் காட்டி வேலை கேட்டான். யாரும் வேலை கொடுக்கவில்லை. ‘இந்தக் கார்ட்டூனையெல்லாம் மக்கள் ரசிக்க மாட்டார்கள்’ என்று அவனை ஒதுக்கினார்கள். ஆனால், அந்த இளைஞன் தன் முயற்சியைக் கைவிடவில்லை.
இந்தச் சூழ்நிலையில் ஓர் ஆலயத்தில் சிறு பிள்ளைகளுக்கான கார்ட்டூன் படங்கள் வரையும் வாய்ப்புக் கிடைத்தது. அவனை ஒரு பழைய குப்பைகூளம் நிறைந்த அறையில் அமர வைத்து படம் வரையச் சொன்னார்கள். அந்த அறையில் எலிகளும் சுண்டெலிகளும் மேலேயும் கிழேயும் ஓடிக் கொண்டிருந்தன. அந்த இளைஞன் மனம் தளரவில்லை. வேலை வேண்டாம் என்று ஓடவில்லை. அங்கேயே உட்கார்ந்து படம் வரைந்தான்.
அங்கு ஓடிய ஒரு எலியையே கார்ட்டூனாக்கினான். அந்தக் கார்ட்டூன்தான் இன்று உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் மிக்கி மவுஸ். அதை உருவாக்கிய வால்ட் டிஸ்னிதான் அந்தக் கார்ட்டூனிஸ்ட்.
நீதி: மனம் தளராத முயற்சிகள் நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும்.