1995_ம் வருடம் அமெரிக்காவில் நடந்த ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப் போட்டியில் வெற்றி பெற்றவர் ஹீதர் வொய்ட் ஸ்டோன். இந்த அழகிக்கு காது கேட்காது. பேச முடியாது. ஒன்றரை வயதிலிருந்து இந்தக் குறை.
இவர் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றதும், பலருக்கும் ஆச்சரியம். இரண்டு பெரிய குறைகளை வைத்துக்கொண்டு எப்படி இந்தப் பெண்ணால் வெல்ல முடிந்தது? என்று புருவத்தை உயர்த்தினார்கள். அவர்களுக்கு அவளது பெற்றோர் தந்த பதில் இதுதான்.
‘‘அவளிடம் இந்தக் குறைகள் இருந்தாலும், அவற்றை நாங்கள் பெரிதாக நினைக்கவில்லை. அவளுக்கு நல்ல படிப்பைக் கொடுத்தோம். நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தோம். அவளிடம் உள்ள நிறைகளைத்தான் அவளுக்கு நாங்கள் சொல்லி வளர்த்தோம். அவளும், தன்னிடமுள்ள குறைகளைப் பார்க்காமல் நல்ல விஷயங்களை மட்டுமே பார்த்தாள். அதுதான் அவள் வெற்றியின் ரகசியம்.’’