Home » கொறிக்க... » சினிமா..சினிமா... » இயக்குனர்களால் தள்ளாடும் தமிழ் சினிமா

இயக்குனர்களால் தள்ளாடும் தமிழ் சினிமா

முன்னூறு நாட்களுக்கு மேல் ஷ¨ட்டிங் நடத்தி பணம், உழைப்பு, நேரத்தை இயக்குனர்கள் வீணடிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் பல நல்ல படைப்புகள் வரத் தொடங்கியது இயக்குனர்கள் பீம்சிங், ஸ்ரீதர் காலத்தில்தான். அத்தகைய இயக்குனர்கள் திரைக்கதையை திட்டமிட்ட பின்தான் ஷ¨ட்டிங் ஸ்பாட்டிற்கே செல்வார்கள்.

ஓரிரு மாதங்களில் அதவாது 50 நாட்களுக்குள் ஒரு படத்தை இயக்கி முடிப்பார்கள். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை 14 நாட்களிலேயே இயக்கி முடித்தவர்தான் ஸ்ரீதர்.

அப்படம் இன்று வரையும் பாராட்டப்படுகிறது. தமிழ் சினிமாவின் காவிய படைப்புகளில் ஒன்றாக கருதப்படுவது 16 வயதினிலே. இப்படத்தை 12 நாட்களில் இயக்கி முடித்தார் பாரதிராஜா.

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர¢களாக கருதப்படும் மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார் படங்களின் ஷ¨ட்டிங் அதிகபட்சம் 75 நாட்களில் முடிந்துவிடும்.

நல்ல படங்களை உருவாக்க அதிக நாட்கள் தேவையில்லை, நல்ல திரைக்கதை மட்டுமே தேவை என்பதுதான் பெரிய இயக்குனர்கள் உணர்த்தியிருக்கும் உண்மை. ஆனால் இன்று இதற்கு நேர்மாறான நடவடிக்கைகளில் சில நல்ல இயக்குனர்களே ஈடுபடுவதால் தமிழ் சினிமாவில் நல்ல படங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Ôநான் கடவுள்Õ படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார் பாலா. இதை இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் முடித்தார். இப்படத்துக்காக ஒரு நாளில் ஒரே ஒரு ஷாட்டை மட்டுமே எடுத்த நாட்களும் பல உண¢டு என்கிறது படக்குழு.

Ôஆயிரத்தில் ஒருவன்Õ படத்துக்கு ரூ. 8 கோடி பட்ஜெட் எனக்கூறி படத்தை தொடங்கினார் இயக்குனர் செல்வராகவன். இப்படத்தை தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன.

250 நாட்கள் ஷ¨ட்டிங் நடந்திருக்கிறது. இன்னும் முடியவில்லை. அத்துடன் பட்ஜெட் ரூ. 13, ரூ. 18 என உயர்ந்து இப்போது ரூ. 21 கோடி ஆகியுள்ளது. ÔயோகிÕ பட ஷ¨ட்டிங் ஒரு வருடத்துக்கு மேலாக நடக்கிறது. இதுவரை பாதி படம் கூட முடியவில்லை. Ôவாரணம் ஆயிரம்Õ படத்துக்கு இரண்டு ஆண்டாக ஷ¨ட்டிங் நடத்தினார் கவுதம் மேனன்.

இத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடப்பதால் ஷ¨ட்டிங் ஸ்பாட் செலவு, நடிகர்களுக்கான கேரவேன் செலவு, துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான சம்பளம் என அனைத¢துமே உயர்ந்து கொண்டு செல்லும். தயாரிப்பாளர் வாங்கிய கடன் மீதான வட்டியும் அதிகரித்துக் கொண்டிருக்கும். ஒரு காட்சியை பலமுறை படமாக்குவதால் பிலிம் வீணாகும்.

அதன் செலவும் கூடும். 300 நாட்களுக்கு மேல் ஷ¨ட்டிங் நடத்தி, படத்தை போட்டு பார்க்கும்போது மூன்றரை மணி நேரத்துக்கு மேலாக அப்படம் ஓடும். அதில் ஒன்றரை மணி நேர காட்சிகளை இயக்குனர்கள் வெட்டுவார்கள்.

அந்த ஒன்றரை மணி நேர காட்சிக்கான செலவு, உழைப்பு, நேரம் அனைத¢துமே வீணாகிறது. இதற்கு முக்கிய காரணம் செலவுகளை திட்டமிடாமல் படத்தை ஆரம்பிக்கும் தயாரிப்பாளரும் ஒரு வரி கதையுடன் ஷ¨ட்டிங் ஸ்பாட்டிற்கு செல¢லும் இயக்குனரும்தான் எனகிறார்கள்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, ‘’இயக்குனர் அமீர், அவரே தயாரிப்பாளராக இருப்பதால் அவர் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

ஆனால், தயாரிப்பாளர்கள் பணத்தில் படம் இயக்கும் சில இயக்குனர்கள், 200 நாள், 300 நாள் என்று செல்லும்போது, பணத்துக்கான வட்டியும் அதிகரிக்கிறது. நஷ்டத்தில் படத்தை வெளியிடும் நிலைதான் ஏற்படுகிறது. இதனால் பல தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்து பிரச்னைகளில் இருக்கின்றனர்.

இதற்கு பல படங்களையும் தயாரிப்பாளர்களையும் உதாரணமாக காட்ட முடியும். 4 மணி நேரம் படம் எடுத்து விட்டு ஒரு மணி நேர காட்சியை வெட்டினால், ஏற்படும் நஷ்டம் 60லிருந்து 70 லட்சம் ரூபாய்.

முதலிலேயே இதைதான் படமாக்க வேண்டும் என்ற திட்டமிடல் இல்லாமல் படம் இயக்கினால் இந்த நஷ்டத்துக்கு யார் பொறுப்பு? பைனான்ஸ் வாங்கி படம் தயாரிப்பவர்கள் இந்த நஷ்டத்தை தாங்கி கொள்ள முடியுமா? என்பதை சில இயக்குனர்கள் உணர்வதே இல்லை.’’ என்றார்.

இந்நிலையை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம் இணைந்து முடிவு எடுக்க வேண்டும் என்பது திரைத்துறையினரின் விருப்பம். ?

Leave a Reply