சடை – பின்னலுடன் அமைந்த தலைமுடி; பின்னிய கூந்தல்; அடர்ந்த கூந்தல்; வேர்; விழுது; திருவாதிரை நாள்; மிதுன ராசி; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று; கற்றை; ஆணியின் கொண்டை; அடைப்பு.
நெறி – வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ஒழுக்கம்; செய்யுள்நடை; குலம்; வழிவகை; ஆளுகை; குதிரை முதலியவற்றின் நடை; வீடுபேறு; கோவில்; தாழ்ப்பாள்; கண்மண்டைக்குழி; மனநிலை.
பிரிதல் – விட்டு விலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.
ஈர்த்தல் – அறுத்தல்; இழுத்தல்; உரித்தல்; பிளத்தல்; எழுதுதல்.
அப்பு – நீர்; கடல்; பாதிரி என்னும் மரவகை; துடை; கடன்; தந்தை; வேலைக்காரன்; முட்டாள்; பூராட நாள்.
உருவம் – வடிவம்; உடல்; அழகு; நிறம்; வேடம்; சிலை; கூறு; தெய்வத்திருமேனி.
கழை – கரும்பு; மூங்கில்; மூங்கில் குழாய்; வேய்ங்குழல்; ஓடக்கோல்; குத்துக்கோல்; தண்டு; புனர்பூச நாள்.
குமுக்கு – மொத்தம்; பெருந்தொகை; கூட்டம்; உதவி; ரகசியம்.
சினப்பு – கோபம்; புண் முதலியவற்றின் வீக்கம்; வேனல்கட்டி; வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு.
திரை – அலை; ஆறு; பூமி; கடல்; திரைச்சீலை; தோல் சுருக்கம்; வெற்றிலை; வெற்றிலைச்சுருள்; வைக்கோல்புரி; பஞ்சுச் சுருள்.
பகுதி – சொல்; முதனிலை; பகுப்பு; வேறுபாடு; திறை; வருவாய்; தன்மை; படை; மந்திரி; கூட்டம்; புத்தகத்தின் வரிசை எண்.
பார் – பரப்பு; தேரின் பரப்பு; வண்டியின் நெடுஞ்சட்டம்; பூமி; நாடு; பாறை; தடை; பருமை; வரம்பு; முத்து விளையும் திட்டு; புத்தன்; அடுக்கு; தடவை.
பெட்பு- பெருமை; விருப்பம்; அன்பு; தன்மை; பேணுகை; பாதுகாப்பு.
வயங்குதல் – ஒளிசெய்தல்; விளங்குதல்; தெளிதல்; தோன்றுதல்; மிகுதல்; நடத்தல்.
விடயம்- செயல்; புலன்; புலனால் அறியும் பொருள்; நூல் சொல்லும் பொருள்; காரணம்; நாடு; பயன்; சுக்கிலம்; பாக்குடன் கூடிய வெற்றிலை மடிப்பு; அடைக்கலம்.
கும்பி – குவியல்; சேறு; சுடுசாம்பல்; வயிறு; யானை; நரகம்; கும்ப ராசி; நெருப்பு; மண்பாண்டம்.