ஊடலும், அதற்குப் பின் கூடலும், அவ்வப்போது சிறு சிறு சண்டைகளும் கூட தாம்பத்திய வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயமாகக் கருதப்படுகிறது.
ஒரு பெரும் சண்டை, சண்டைக்குப் பின் சமாதானம், சமாதானத்திற்குப் பின் தாம்பத்ய உறவு வைப்பது ஒன்றும் முரண்பாடான விஷயமல்ல. காலம்காலமாக வந்து கொண்டிருக்கும் விஷயம்தான். பெரும்பாலான தம்பதியர்கள் அனுபவித்த ஒரு விஷயமாகவும் இது இருக்கும்.
ஏதோ ஒரு கருத்து வேறுபாட்டினால் தம்பதிகளுக்குள் சண்டை வரலாம். ஒருவர் தன் தவறை உணர்ந்து அல்லது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தங்களது தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்கலாம். அல்லது தவறை இருவரும் மறந்து விடலாம். பிறகு என்ன.. ஒரே கொஞ்சல்தானே..
கணவன், மனைவி இருவருக்குள் ஒரு பரஸ்பர அன்பை உருவாக்கும். அதே போல் பெண்களின் அந்த மூன்று நாட்களில் கணவன்மார்கள் கண்டிப்பாக ஆதரவாக, உதவியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்புதான். இதை ஆண்கள் புரிந்து கொண்டு ஆதரவாக நடந்து கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஒவ்வொரு விஷயத்தையும், அவர்களது இடத்தில் இருந்து பாருங்கள் உங்கள் வாழ்க்கை பலாப் பழத்தின் தோல் போல் அல்லாமல், பலாச் சுளை போல் மாறும்.