காதலர்கள் செய்ய வேண்டியவை…
காதலர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்று சில உள்ளன. அவற்றை அறிந்து வைத்துக் கொள்வதால் அவர்களுக்குள் ஏற்படும் பெரும் கருத்து வேறுபாடுகள் குறையும்.
காதலர்கள் ஒருவரது குண அமைப்பு எப்படி என்பதை தெரிந்திருக்க வேண்டும். அவரது விருப்பு, வெறுப்புகளையும் அறிந்திருத்தல் அவசியம்.
அவர்களது நண்பர்களைப் பற்றி நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். சில சமயங்களில் பெரிய பிரச்சினைகள் எல்லாம் அவர்களது நண்பர்கள் மூலமாக சுமூகமாக முடிய வாய்ப்புகள் உண்டு.
அவரது பணியிடம், பணிச்சுமை பற்றியும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பணி முடித்து வரும் காதலரிடம் பிரச்சினைகளைப் பற்றி பேசாமல் மகிழ்ச்சியான விஷயங்களைப் பேசுவதற்கு இது உதவும்.
இவை எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் காதலர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்,
காதலரின் கவலையை குறையுங்கள். மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள்.
ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
எந்தப் பிரச்சினையானாலும் விட்டுக் கொடுத்துப் பேசுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
காதலிப்பவருக்குப் பிடித்த விஷயங்களை செய்து அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குங்கள்.
ஒருவரை ஒருவர் உண்மையாக நேசியுங்கள். சிறு வெறுப்பும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.
எந்த காரணத்திற்காகவும் காதலிப்பவரை சந்தேகிக்காதீர்கள். சந்தேகிப்பவரை காதலிக்காதீர்கள்.
காதலிப்பவர் கொடுக்கும் பரிசுப் பொருட்களை பத்திரமாக பாதுகாத்து வையுங்கள். அவர் நினைவுகூரும்போது காண்பிக்க உதவும்.