Home » காதல் » ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!

ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.


03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை… அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது…. எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.