ஒரு ஆளுக்காக மொத்த யூனிட்டுமே காத்திருக்கணுமா? எங்கே போயிட்டார் இந்த கனல் கண்ணன்? – டைரக்டர் பாபு சத்தம் போட்டுக் கொண்டு இருந்தபோதே கனல் கண்ணனின் கார் சீறிக்கொண்டு வந்து நின்றது. ஸாரி பாபு… கொஞ்சம் லேட் ஆயிடுச்சு! – அவர் சொல்லி முடிப்பதற்குள்,
அது எனக்குத் தெரியும். லைட்டுக்குத் தெரியாதே! அது இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு மேல தாங்காது. ஷட்டிங் கேன்சல்! – எரிச்சலோடு சொன்னார் பாபு.
இல்லை பாபு… ஒண்ணரை மணி நேரத்துக்குள்ள முடிச்சுடலாம்!
தாமதமாக வந்ததை ஈடுகட்டும் விதத்தில் ஆக்ஷன் தூள் பறந்தது. தொழிற்சாலை கட்டுவதற்காக, குடிசைப் பகுதியில் வசிக்கும் ஏழை களைக் காலி செய்வது போன்ற காட்சி. வானத்துக்கும் பூமிக்குமாக எகிறி எகிறி ஏழைகளைத் துவம்சம் செய்தனர் ஸ்டண்ட் ஆட்கள். மரண ஓலங்களும் பெண்களின் ஒப்பாரியுமாகக் காட்சி களை கட்டியது. சொன்னபடி குறைவான டேக்குகளில் காட்சி ஓகே ஆகிவிட்டது.
இப்படி மனுஷங்களை அடிச்சு, அழுகைச் சத்தத்தைக் கேக்கறதே பொழைப்பாப் போச்சு பாபு. என்னதான் ஜோடனைனாலும் கனவுலேயும் இந்த ஓலம் வந்து கஷ்டப்படுத்துது. அதான்… ஏதோ நம்மளாலானதைச் செய்யலாமேனு வசதி இல்லாத இளம் பெண்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதை வழக்கமா வெச்சிருக்கேன். காலையில கூட அதுக்காகத்தான் திருத்தணி போயிட்டு வந்தேன். எதிர்பாராத விதமா லேட்டாயிடுச்சு. ஸாரி பாபு..! கனல் கண்ணன் சொல்லி முடித்தபோது நெகிழ்ந்து நின்றிருந்தார் பாபு.
ஸோமா-
© 2008, ↑ ilaignan.com
NTamil.com | Newstamil.com | Ilaignan.com | Kisukisu.com | Tamilnadutoday.com | Tamildaily.com