அந்த அழகான பெண்ணுக்கு தக்காளிகள் வளர்ப்பதில் கொள்ளை ஆசை! இதற்காக அவள் பலரைச் சந்தித்து, அவர்கள் தோட்டத்து அனுபவங்களைக் கேட்டுக் கொள்வாள். தோட்டக் கலை பற்றிய புத்தகங்களை நிறைய வாசிப்பாள். தன் தோட்டத்தில் எல்லாமே அழகாகப் பூத்துக் குலுங்கினால் அதுவே அவளின் பெருமகிழ்ச்சி.
இப்படிப் பேரார்வத்தோடு தன் தோட்டத்தைக் கவனித்தவளுக்கு, ஒரு தீராத கவலை. அவள் தோட்டத்துத் தக்காளிகள் சிவப்பாகக் காணப்படவில்லையே என்று அவளுக்குள் ஒரு குறை. பல தோட்டங்களுக்குச் சென்று சொந்தக்காரர்களிடம் காரணத்தை விசாரித்தாள். அவர்கள் சொல்லியபடியெல்லாம் செய்து பார்த்தாள்.
ஆனால் எந்தப் பலனுமே இல்லை. பழைய குருடி கதவைத் திறவடி கதைதான்!
ஒரு நாள் காலாற நடந்து செல்லும்போது, ஒரு தோட்டத்தின் வழியாகச் செல்ல நேரிட்டது. அங்கே காய்த்துக் குலுங்கிய தக்காளிப் பழங்களைப் பார்த்தபோது, அவள் வியப்பால் அதிர்ந்து போனாள். அடடா என்ன அழகு. இரத்தச் சிவப்பு நிறத்தில் குலைகுலையாக காய்த்துக் குலுங்கிய பழங்கள்தான் அவள் கனவுப் பழங்கள்.
எப்படி இந்தத் தோட்டக்காரரால் முடிகின்றது?
அவள் கண்கள் நாலாபக்கமும் சுழன்றன. ஒரு நடுத்தர வயதுக்காரர் தரையில் உட்கார்ந்து, ஒரு செடியின் கீழ் உட்கார்ந்து நிலத்தைக் கிளறுவதைக் கண்டாள். வேகமாக அந்த மனிதர் அருகே சென்றாள் அந்த அழகி.
மன்னிக்க வேண்டும். உங்களை ஒன்று கேட்கலாமா என்று அவள் வினாவ, தலைநிமிர்ந்த அந்த மனிதர், தன்முன்னே ஒரு அற்புத அழகி நிற்பதைக் கண்டு ஒருகணம் நிலை குலைந்தார். மறுகணம் தன்னைச் சுதாரித்துக் கொண்டு
ஓ அதுவா? நான் அந்திப் பொழுதுகளில் ஆள் நடமாட்டம் இல்லாத சமயங்களில், நிர்வாணமாக, இந்தத் தக்காளிச் செடிகளைச் சுற்றி வருவேன். உருண்டு திரண்ட செக்கச் சிவந்த பழங்களின் இரகசியம் இதுதான்
என்றார் அந்த மனிதர்.
இதைக் கேட்டபோது அந்த அழகியின் முகம் வெட்கத்தால், தக்காளியாகச் சிவந்தது. தலையைக் குனிந்தபடி நன்றி சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள்.
அன்று பொழுது சாயும் நேரம் அவளும் தன் தக்காளிச் செடிகளைச் சுற்றி நடந்தாள். அத்தோடு விட்டுவிடாமல், தோட்டத்திலுள்ள அனைத்து காய்கறிச் செடிகளையும் ஒரு சுற்றுச் சுற்றினாள். உடம்பில் எந்த ஆடையுமே இல்லை. சுற்று முற்றும் பார்த்தாள். யாருமே இல்லை. தோட்டத்துக்குப் பக்கத்தில் வீடு இருந்தமையால், வேகமாக அவளுக்கு வீட்டுக்குள் சென்று உடையை மறுபடியும் அணிய முடிந்தது.
இதை அவள் அடிக்கடி செய்து வந்தாள்.
இன்னொரு தடவை அவள் முன்பு சென்ற பாதையில் நடந்து சென்று அதே தோட்டகாரனைச் சந்தித்தாள்.
எப்படி இருக்கின்றன உங்கள் தக்காளிகள்?
ஆவலோடு அவன் விசாரித்தான். பதிலும் வந்தது.
தக்காளிகள் மாறவில்லை. ஆனால் தோட்டத்துக் கெக்கரிக்காய்கள் இப்பொழுது நன்றாகத் திரண்டு பருத்துக் காய்க்கின்றன.
என்றாள் செக்கச் சிவந்த தக்காளிகளுக்கு ஆசைப்பட்ட அந்த அழகி!!
இப்பொழுது இருவருமே தலையைக் குனிந்து கொண்டார்கள்……
-ராஜேஸ்மணாளன், Swiss-