இனி இசையை ரசிப்பதற்கு வோல்க்மேன், கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவற்கு பதிலாக இனி காலணிகளையும் பயன்படுத்தக்கூடி யவாறான புதிய காலணியை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புளும் எப்.எம். என்ற நிறுவனமே மேற்படி காலணியை உருவாக்கியுள்ளது. ‘புளும் பூட்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக்காலணியை எந்தவொரு பாடல் கேட்கும் சாதனங்களையும் ப்ளு டூத் மூலம் இணைத்துக்கொள்ளலாம்.
தெளிவான மஞ்சள் நிறத்தில் பெரிய அளவில் அமைந்துள்ள இக்காலணியினுள் பாதுகாப்பாக பணம், கையடக்கத் தொலைபேசிகள், டேர்ச், டிஸ்ஸு போன்றவைகள் வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் இது வோட்டர் புரூப் முறையில் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த காலணியுள் நீர் புக முடியாது.
மேலும் இக்காலணியில் கம்பியில்லா தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய ஸ்பீக்கர்கள் ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் சுமார் 5 மணி நேரத்திற்கு பாடல்களை கேட்க முடியும்.
இதேவேளை இக்காலணிகளை பயன்படுத்தும் பயனர்களால் புளும் எம்.எப் இனுடைய ஐ.ஓ.எஸ் எப்ஸ் மூலம் 18 மில்லியன் பாடல்களை கேட்க முடியும் என அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒலிக் பெமிங்கோ தெரிவித்துள்ளார்.