நீங்கள் கொண்டுள்ளது காதலா? Infractuation எனப்படும் இனக்கவர்ச்சியா? அறிய வேண்டுமா…? மேலே படியுங்கள்…
உலகம் முழுவதும் பரவி இருக்கிற உன்னதமான உணர்வு எதுன்னா? அது காதல் தான். காதலிக்கிறவங்களுடைய குணநலன்கள்ல வித்தியாசங்களும் வேறுபாடுகளும் நிறைய இருக்கறது சகஜமான ஒண்ணு தான்.
ஆனா, காதல்ல வித்தியாசம் இருக்கலாமா? இருக்க கூடாதுல்ல… அதனால காதலுக்கும் Infractuationனு சொல்லப்பட்ற இனக்கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசங்களை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குங்களேன்.
இனக்கவர்ச்சி
தற்காலிகமாக ஒருவர் மீது ஏற்படும் விருப்பம்
பாதுகாப்பற்ற குற்ற உணர்வை ஏற்படுத்துவது.
சேர்ந்து இருப்பது போன்ற மாய உணர்வை ஏற்படுத்தி கனவுகளை அழித்து விடும்.
நம்பிக்கையில்லாத தற்காலிக மகிழ்ச்சியை தரக்கூடியது.
சூழ்நிலைகளை பயன்படுத்தி தப்பித்து கொள்ள வேண்டும் என்ற சுயநல உணர்வை ஏற்படுத்துவது.
இனக்கவர்ச்சி என்பது அர்த்தமற்ற ஆபாச பாலுணர்வின் தூண்டுதல்.
இனக்கவர்ச்சியின் மறுபெயர் “பற்றாக்குறையான நம்பிக்கை”.
இனக்கவர்ச்சியால் தூண்டப்பட்டு காரியங்கள் செய்து பின்னாளில் வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்தக் கூடியது.
காதல்
ஆழமான நட்புணர்வை உணரக்கூடிய அணையாத நெருப்பு
உண்மையான புரிதலை உருவாக்குவது.
உங்களவர் உங்களுக்கு தான் என்ற வலிமையான உள்ள அன்பை ஏற்படுத்துவது.
நம்பிக்கையினால் இரு உள்ளங்கள் இணைக்கப்படுவது.
பொறுமையாய் காத்திருந்து எதிர்காலத்தை திட்டமிட்டு காதலித்தவரை கைப்பிடிக்க வேண்டும் என்ற மனோநிலையை உருவாக்கக்கூடியது.
பண்பட்ட நட்புணர்வின் உண்மை வெளிப்பாடு.
காதலின் மறுபெயர் நம்பிக்கை. எதிலும் எப்போதும் நம்புதல்.
காதல் உங்களை உயர்த்தும். உங்கள் எண்ணங்களை மேம்படுத்துவது. முன்பு இருந்ததை விட உங்களை சிறந்தவர்களாக்குவது.