சீனாவில் தொடர்ந்து 4 மணிநேரம் அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடிய பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஜிங்கில் இளம்பெண் ஒருவர் படுக்கையில் படுத்தவாறு தனது அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடி உள்ளார்.
அவர் தொடர்ந்து 4 மணிநேரம் விளையாடி உள்ளார். இதன் பின்னர் 4 மணிநேரத்தின் பின்னர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது செயற்கை மார்பகம் வெடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை மார்பகங்களின் தரம் குறைவானதாக இருந்ததாலும், அவர் பல மணிநேரம் குப்புறப்படுத்திருந்ததாலுமே மார்பகங்கள் வெடித்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.