கோழிகளை தலைகீழாக கால்களைப் பிடித்து எடுத்துச் சென்ற நபரொருவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற நீதிவான் திருமதி எஸ். லியனராச்சி 1000 ரூபாவை அபராதமாகச் செலுத்தும்படி உத்தரவிட்டார்.
ஜா-எலயிலிருந்து கொழும்புக்கு கோழிகளை எடுத்து வந்து விற்பனை செய்து வரும் சந்தேகநபர் பாலத்துறையில் வாகனத்திலிருந்து கோழிகளைகால்களைப் பிடித்து தலைகீழாக எடுத்துச் சென்றதால் மிருகவதைச் சட்டப்படி கிரான்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மாத்தறை வி.ஏ. நிசாந்த ஜயமான்ன என்ற நபருக்கே இவ்வாறு அபராதம்விதிக்கப்பட்டது.