ஆபிரிக்காவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சுயமாக விமானங்கள், ஹெலிகொப்டர்களை நிர்மாணிப்பதற்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த இளைஞர்களுக்கு போதிய பயிற்சியோ, மூலப்பொருட்களோ பணமோ கிடையாது. இவர்கள் தயாரிக்கும் வான் கலங்கள் பொதுவாக பார்வைக்கு மாத்திரேம விமானங்கள், ஹெலிகொப்டர்கள் போன்று தோற்றமளிக்கின்றன.
ஆனால், என்றாவது ஒருநாள் பறக் கும் வான் கலங்களையும் தம்மால் உருவாக்க முடியும் என இவர்கள் நம் புகின்றனர்.
நைஜீரியாவின் கனோ நகரைச் சேர்ந்த முபாரக் அப்தல்லாஹி எனும் இளைஞர் ஹெலிகொப்டர் ஒன்றை நிர்மாணிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 24 வயதான முபாரக் அப்துல்லாஹி பௌதிகவியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
பழைய கார்கள், மோட்டார் சைக்கிளின் பாகங்களை அவர் தனது ஹெலிகொப்டர் தயாரிப்புக்கு பயன்படுத்துகிறார். இதேவேளை கென்யாவைச் சேர்ந்த கெப்ரியல் என்டேரிட்டு எனும் இளைஞர் தனது வீட்டு முற்றத்தில் விமானமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். மிருகங்களுக்கான உணவுகளை தயாரிக்கும் ஆலையொன்றில் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தை தனது விமானத் தயாரிப்புக்கு அவர் பயன்படுத்தியுள்ளார்.
சோமாலிலாந்தைச் சேர்ந்த இளைஞர்களும் சளைத்தவர்கள் அல்லர். அந்நாட்டைச் சேர்ந்த மொஹமட் ஆப்தி பார்கடில், சயீட் ஆப்தி ஜீடே. ஆப்தி பஹரர் லிடென் ஆகிய மூன்று இளைஞர்கள் பழைய வேன் ஒன்றின் இயந்திரத்தைப் பயன்படுத்தி ஹெலிகொப்டர் ஒன்றை நிர்மாணித்துள்ளனர். காட்டுத் தீயை அணைப்பதற்கு விமானத்தை பயன்படுத்த விரும்புவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இவ்விமா னங்கள் என்றாவது பறக்கும் சக்தி யை பெறுமா என்பதில் நிபுணர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.