Home » அதிசய உலகம் » தலையை இழந்த பின்பும் ஒன்றரை வருடம் வாழ்ந்த அபூர்வ சேவல்! – வீடியோ இணைப்பு

தலையை இழந்த பின்பும் ஒன்றரை வருடம் வாழ்ந்த அபூர்வ சேவல்! – வீடியோ இணைப்பு

cock1தலை­வெட்­டப்­பட்ட கோழிகள், சேவல்­க­ளுக்கு சிறிது நேரம் உடலில் உயிர் இருக்கும். அவை துடி­து­டித்­த­வாறு சிறி­து­தூரம் ஓடிச்­செல்­லவும் கூடும் என்­பதை பலர் அறிந்­தி­ருப்­பீர்கள். ஆனால், தலையை இழந்த சேவ­லொன்று ஒன்­றரை வரு­ட­காலம் உயிர்­வாழ்ந்­தது என்றால் நம்ப முடி­யுமா? நம்ப முடி­கி­றதோ இல்­லையோ அப்­படி ஒரு சேவல் உலகில் வாழ்ந்­தமை உண்மை வர­லா­றாக உள்­ளது.

அமெ­ரிக்­காவின் கொல­ராடோ மாநி­லத்­தி­லுள்ள புரூ­டிட்டா நகரில் 1945 முதல் 1947 ஆம் ஆண்­டு­வரை வாழ்ந்தது அச்­சேவல். அதற்கு “மைக்” எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது. பின்னர் “அதி­சய சேவல் மைக்” என அழைக்­கப்­பட்­டது.

தலையை இழந்­தமை
1945 செப்­டெம்பர் 10 ஆம் திகதி, புருட்­டிடா நகர விவ­சா­யி­யான லொய்ட் ஒல்சென் என்­ப­வரின் வீட்­டுக்கு அவரின் மாமியார் சென்­றி­ருந்தார். அவ­ருக்கு விருந்­த­ளிப்­ப­தற்­காக கோழி­யி­றைச்சி கொண்டு வரு­மாறு ஒல்­செனை அவரின் மனைவி கோரினார். ஐந்­தரை மாத வய­து­டைய மைக் எனும் சேவலை ஒல்சென் தெரி­வு­செய்தார்.

அச்­சே­வலை அவர் தலையின் ஓர­மாக வெட்­ட­மு­யன்­ற­போது, ஒல்­செனின் கைக்­கோ­டரி நழு­வி­யதால் சேவலின் கழுத்­துக்­கூ­டாக செல்லும் நாடி தப்­பி­யது. அதன் ஒரு காது மற்றும் மூளையின் ஒரு­ப­குதி ஆகி­யன பாதிக்­கப்­ப­டாமல் இருந்­தன. (குரு­திக்­கு­ழாயில் ஏற்­பட்ட அடைப்­பொன்றின் கார­ண­மாக அதற்கு குரு­திப்­பெ­ருக்கு ஏற்­ப­ட­வில்லை என்­பது பின்னர் கண்­ட­றி­யப்­பட்­டது.)

cock2அதனால் அச்­சேவல் தடு­மாறி நடக்கத் தொடங்­கி­யது. அது கூவு­வ­தற்கும் முயன்­றது. ஆனால் அது முடி­ய­வில்லை. எனினும், சேவல் உயி­ரி­ழக்­கா­ததால் வியப்­ப­டைந்த ஒஸ்லென் அதனை கவ­ன­மாக பரா­ம­ரிக்கத் தீர்­மா­னித்தார்.

கழுத்­துப்­ப­கு­தி­யி­லுள்ள உண­வுக்­கு­ழாய்க்குள் பால் மற்றும் தண்ணீர் ஆகி­ய­வற்றை “ஐ ட்ரொப் ஸ்ரிஞ்சர்” மூலம் செலுத்­தினார். சிறி­த­ளவு அரைத்த சோளத்­தையும் அவர் கழுத்­தி­லுள்ள உண­வுக்­குழாய் வழி­யாக ஊட்­டினார்.

இதனால் அச்­சேவல் மேலும் வளரத் தொடங்­கி­யது. ஏனைய கோழிகள், சேவல்­க­ளுடன் வளர்க்­கப்­பட்ட அச்­சேவல் அதி­கா­லையில் கூவவும் செய்­தது. அதன் தொண்­டை­யி­லி­ருந்து சத்தம் எழுந்­தது. ஏனைய சேவல்கள் கூவும் ஒலியைப் போல் அது இருக்­க­வில்லை.

பிர­பலம்
சில மாதங்­களில் இச்­சேவல் குறித்த தக­வல்கள் அமெ­ரிக்­கா­வெங்கும் பரவத் தொடங்­கின. பெரும்­பா­லானோர் அவற்றை கட்­டுக்­க­தைகள் எனக் கூறி நம்ப மறுத்­தனர்.

அதை­ய­டுத்து, உண்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக அச்­சே­வலின் உரி­மை­யா­ள­ரான ஒஸ்லென் அதை சோல்ட்லேக் நக­ரி­லுள்ள உட்டா பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு கொண்டு சென்றார். இச்­சேவல் குறித்த தக­வல்கள் உண்­மை­யென நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் இரண்டு தலை­யு­டைய கன்­றுக்­குட்டி போன்ற விநோத மிரு­கங்கள், பிரா­ணிகள் சகிதம் ஊர் ஊராக கொண்­டு­செல்­லப்­பட்­டது.

0.25 டொலர் கட்­டணம் செலுத்தி இச்­சே­வலை பார்க்க மக்கள் அனு­ம­திக்­கப்­பட்­டனர். அதன் புகழ் உச்­சத்­தி­லி­ருந்த காலத்தில் மாதாந்தம் 4,500 டொலர் வரை அது திரட்­டி­யது. தற்­போ­தைய பெறு­ம­தி­யுடன் ஒப்­பிட்டால் அது 48,000 டொலர்­க­ளுக்கு (சுமார் 60 இலட்சம் இலங்கை ரூபா) சம­னாகும்.

டைம், லைவ் உட்­பட புகழ்பெற்ற சஞ்­சி­கைகள், பத்­தி­ரி­கை­களில் இச்­சே­வலின் புகைப்­ப­டங்கள் வெளி­யா­கின.

மைக்கின் புகழ் வெகு­வாக பர­வி­யி­ருந்ததால், வேறு பலர் சேவல்­களின் தலையை அரை­கு­றை­யாக வெட்டி மைக் போன்ற தலை­யில்லா சேவல்­களை உரு­வாக்க முயன்­றனர். ஆனால் அவை ஓரிரு நாட்­க­ளுக்கு மேல் தாக்­குப்­பி­டிக்­க­வில்லை.

1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சுற்­று­லா­வொன்றின் பின்னர் திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போது நள்­ளி­ரவில் அச்­சேவல் சுவா­சிப்­ப­தற்குத் திண­றி­யது. அதே­வேளை, அச்­சே­வ­லுக்கு உணவூட்டும் மற்றும் தூய்­மைக்கும் ஸ்ரிஞ்­சர்­களை கண்­காட்­சிக்­கூ­ட­மொன்­றி­லேயே மற­தி­யாக விட்­டு­விட்டு வந்­தி­ருந்தார் ஒல்சென். அதனால் அச்­சே­வலை காப்­பாற்ற முடி­ய­வில்லை.

எனினும் தான் அச்­சே­வலை விற்­று­விட்­ட­தாக மற்­ற­வர்­க­ளிடம் ஒல்சென் கூறினார். அதனால் அச்சேவல் சுற்றுலாக்களில் பங்குபற்றிக்கொண்டிருப்பதாக 1949 ஆம் ஆண்டுவரை பலர் நம்பினர்.

கொலராடோ மாநிலத்தின் புரூட்டிடா நகரில் 1999 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மே 3 ஆவது வார இறுதிநாள் “மைக் தலையற்ற சேவல் தினம்” அனுஷ்டிக்கப்படுகிறது. தலையற்ற கோழிகள் போன்று ஓடுதல் உட்பட பல்வேறு விநோத விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

Leave a Reply