Home » கொறிக்க... » கட்டுரைகள் » ஆண்கள் பெண்களிடம் மறைக்கக் கூடிய சில விஷயங்கள்!

ஆண்கள் பெண்களிடம் மறைக்கக் கூடிய சில விஷயங்கள்!

mansecretdஇந்த உலகத்தில் அனைவருக்கும் இரகசியம் என்பது கண்டிப்பாக இருக்கும். அதிலும் ஒரு ஆண்களை முழுவதுமாக அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் நிச்சயம் அவர்களைப் பற்றிய சில விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கும். அது மனைவியாக இருந்தாலும் சரி, அவர்களிடம் கூட தன்னை பற்றிய அனைத்து விஷயத்தையும் கூற மாட்டார்கள்.

ஏன் அத்தகையவர் நண்பனாக இருக்கலாம் அல்லது பல வருடம் பழக்கமான நபராக கூட இருக்கலாம். ஆனால் அதற்காக எல்லாம் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளை எல்லாம் ஆண்கள் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. முக்கியமாக அவர்களின் கடந்த காலத்தை,பொக்கிஷமாக பாதுகாக்க நினைக்கும் சில நினைவுகளை தங்களுக்குள் இருக்கவே விரும்புவார்கள். அதனை யாரிடமும் கூற விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அவை அனைத்தையும் கூறினால், அவர்களது வாழ்க்கைக்கே உலை வைத்துக் கொள்வது போல் ஆகிவிடும். சரி, இப்போது ஆண்கள் அப்படி மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று சிலவற்றை பார்க்கலாமா?

ஸ்ட்ரிப் கிளப்ஸ் (strip clubs)

பல ஆண்களுக்கு பெண்களின் கவர்ச்சி நடனங்களை, கிளப்களில் பார்ப்பது அலாதி விருப்பமாக இருக்கும். உங்களுக்கு கணவராக வரப் போகின்றவர், நண்பர்களுடன் சேர்ந்து பெண்களின் ஆடை அவிழ்ப்பு நடனத்தை கண்டு கழிக்க சென்றிருக்கலாம். ஆனால் அதனை பற்றிய சிறு துப்பை கூட அளிக்கமாட்டார். ஏனென்றால், எந்த ஒரு பெண்ணும் தன் கணவர் திருமணத்துக்கு முன் இந்த மாதிரி செயல்களில் ஈடுப்பட்டார் என்பதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். எனவே இத்தகைய விஷயத்தை சொல்லிக் கொள்ளமாட்டார்கள்.

உணர்ச்சிவசப்பட்டவராக இருக்கலாம்

தான் செய்த தவறு தன் மனைவிக்கு தெரிந்த பின் அவர்களின் கண்ணீர் பல பேருக்கு நடுக்கத்தை உண்டாக்கும். அதனால் ஆண்கள் சில விஷயங்களை வெளிப்படையாக பேச மறுக்கின்றனர். எனவே ஆண்கள் தங்களை ஒரு பலசாலியாகவும், ஆற்றல் மிக்கவராகவும் காட்டவே விரும்புகிறார்கள். மேலும் கண்ணீர் விடுவதும், உணர்ச்சியை வெளிப்படுத்துவதும், பெண்கள் செய்யக்கூடியவை என்றும் இன்னும் சில ஆண்கள் எண்ணுகிறார்கள்.

ஆபாசப் படங்கள்

ஆபாசப் படங்களை ஏற்கனவே பார்த்ததாக யாரிடமும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பொதுவாக ஆண்களுக்கு ஆபாச விஷயங்களிலும், பாலின்பத்திலும் அதிக ஈடுபாடு இருந்த போதிலும், அதனை வெளிப்படையாக தங்கள் மனைவியிடம் கூற மறுப்பார்கள்.

அம்மா பிள்ளை

பல ஆண்கள் தங்களின் தாயால் செல்லம் கொடுக்கப்பட்டு கெட்டு போய் உள்ளனர். அதனால் திருமணம் ஆன பின்பு அல்லது ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருக்கும் போது, அந்த பெண்ணை தன் தாயுடன் ஒப்பிடுவதை ஒரு பழக்கமாக வைத்திருப்பார்கள். இது அவர்கள் இருவருக்குள்ளும் மன ஸ்தாபத்தை ஏற்படச் செய்யும். எனவே ஆண்களுக்கு தான் தாய்க்கு செல்லப் பிள்ளையாக இருப்பது தெரிந்திருந்தாலும், அது துணைக்கு தெரியக் கூடாது என்று நினைப்பர்.

விசித்திரமான கனவுகள்

தன் கனவுகளை மனைவியோடு பகிர்ந்து கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் சில வகை கனவுகளும், கற்பனைகளும் கேட்பதற்கு, துணையை மட்டமாக எண்ணத் தூண்டலாம். அதனால் சில கனவுகளை ஆண்கள் சொல்லத் தயங்குவார்கள். ஏனெனில் அதனை கேட்டால் அவரை விட்டு போகக் கூட பெண்கள் தயங்க மாட்டீர்கள்.

Leave a Reply