ஜேர்மனியின் பெர்லின் பகுதியில் குடியிருக்கும் மக்கள் அண்டை வீட்டினரின் சிறுநீர் கழிக்கும் சத்தமானது மிகவும் இடையூறாக உள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
அருகாமையில் உள்ளவர்கள் சிறுநீர் கழிக்கும் சத்தமானது கழிப்பறையின் சுவரையும் தாண்டி வரும் இந்த சத்தத்தினால் அலுவலகங்களுக்கு சென்று திரும்பி வந்து ஒய்வெடுக்கும் எங்களுக்கு இடையூறாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நீதிபதி கூறுகையில், ஒரு மனிதனின் சிறுநீர் கழிக்கும் சத்தமானது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றுதான் எனக் கூறி அம் முறைப்பாட்டை நிராகரித்துள்ளார்.
மேலும் ஒரு கட்டடத்தின் தன்மையை பொறுத்தே தீர்வு கூற இயலும். இக்கட்டடமானது 1950ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளதால் இதிலிருந்து வரும் சத்தத்தை கட்டுப்படுத்த இயலாது. ஏனெனில் இக்கட்டடம் மெல்லிய சுவரால் எழுப்பப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.