Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » புதுமண தம்பதிகள் புறக்கணிக்க கூடாதவை

புதுமண தம்பதிகள் புறக்கணிக்க கூடாதவை

திருமணம் என்றதும் மணப்பெண், மணமகன் இருவருக்குமே ஒரு படபடப்பு ஒட்டிக் கொள்ளும் என்பார்கள்.
 
தற்காலத்திய இளைஞர்களிடம் அப்படியொரு நிலையைப் பார்க்க முடிவதில்லை. அவர்களிடம் பதற்றம் கிடையாது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடனே இருவரும் கை கோர்த்து விடுகிறார்கள்.(காதல் திருமணம் என்றால் இந்தக் கை கோர்ப்பு பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.) தவிர, தங்களது எதிர்கால வாழ்க்கை குறித்து தீர்க்கமாக சிந்திக்கிறார்கள். திட்டமிடுகிறார்கள்.

ஒருவருக்கொருவர் முன்னதாகவே அறிமுகம் ஆகிக் கொள்வதால் திருமணத்தின்போது தேவையற்ற டென்ஷன் மணமக்களிடையே இல்லாமல் போகிறது.

ஆனால் திருமணத்திற்குப் பின் புது வாழ்க்கை அமைத்துக் கொள் ளும் தம்பதிகளுக்கு வேறு மாதிரி யான சமூக, குடும்பக் கடமைகள் உண்டு. அது அவர்களின் திருமண வாழ்க்கை சிறக்க காரணமானது. அவற்றில் 5 முக்கிய அம்சங்கள் இங்கே:

சமூக பொறுப்பு:காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணமோ எது வென்றாலும் அதற்கேற்ப சமூகம் உங் களை கண்காணிக்கத் தொடங்கி விடுகிறது. நீங்கள் ஒரு குடும்பத்தினருக்கும் மட்டும் உரியவர் அல்ல. இரண்டு குடும்பத்திற்கும் இணைப்பு பாலமாக எவ்வாறு செயல்படப் போகிறீர்கள் என்பதை உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆவலோடு எதிர் பார்ப்பார்கள். உங்களின் நிறை, குறைகள் அலசப்படும். அது உங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ அமையலாம்.

உங்கள் குடும்பம் மட்டுமின்றி அக்கம் பக்கம் வசிப்பவர்கள், உங்களது நண்பர்கள், தோழிகள் என்று உங்களுக்குத் தெரிந்த அனைவருமே உங்களை கண்காணிக்கக் கூடியவர் களாகவும் எடைபோடக் கூடியவர்களாகவும் மாறிவிடுவார்கள்.

இவ்வளவு ஏன், அன்றாடம் தெருவில் வரும் காய்கறிக்காரர் முதற்கொண்டு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர் வரை உங்களைப் பற்றிய குணாதி சயங்கள் பேசப்படும். இதனால் உங்களுக்கு சமூகத்தில் பொறுப்புகள் நிறைய இருக்கின்றன என்பதை உணர வேண்டும்.

கல்யாணமாகி சில மாதங்கள் வரை உங்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இரண்டு வீட்டாரும் தருவார்கள்.அதன் பின் உங்களுக்கு மதிப்பு குறைவதும் கூடுவதும் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தினைப் பொறுத்துத்தான் அமையும்.

தாம்பத்ய உறவு: திருமணத்திற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக கற்பனை செய்து வைத்துக் கொண்டிருக்கும் விஷயம் இது. சினிமாவில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப் பிடித்து ஓடியாடி மரங்களுக்குப் பின் டூயட் பாடுவது, படுக்கை அறையில் சந்தோஷமாக இருப்பது போன்ற காட்சிகளைப் பார்ப்பதன் மூலம் இருபாலரின் உடலிலும் ஒரு வித ரசாயன மாற்றம் ஏற்கனவே நிகழ்ந்திருக்கும்.

இதனால் முதல் நாள் இரவின்போதே தான் பார்த்தையெல்லாம் நிஜமாக்கிவிட நினைக்கும் துடிப்பும் முழுமையான தாம்பத்ய சுகம் கிடைத்திடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இன்றைய மணமகன்களுக்கு நிறையவே இருக்கிறது. மணப்பெண்ணுக்கோ இனம் புரியாத ஒரு எதிர்பார்ப்பு. முதல் இரவு எவ்வாறு இருக்குமோ என்று ஓர் பதற்றம்.
 
ஆனால் இவர்கள் அடிப்படையில் ஒரு விஷயத்தை மறந்து விடு கிறார்கள்.கல்யாணம் ஆன அன்றே தங்களது முழு விருப்பமும் நிறை வேறிடவேண்டும் என்று நினைப்பது தவறு. ஏனென்றால் திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் மனரீதியாக மட்டுமே தயாராகி இருப்பார்கள். அவர்களை தாம்பத்ய பந்தம்தான் உடல் ரீதியாகவும் இணைக்கிறது.

அதனால் கூடியவரை புதுமணத் தம்பதிகள் உடனடி வேகம் காட்ட வேண்டிய அவசியமில்லை. தங்களது உணர்வுகளை மெல்ல மெல்ல பக்குவமாக வெளிப்படுத்தி அரங் கேற்றிக் கொண்டால் இருவருக்குமே இல்லற சுகம் இனிக்கும்.

முடிவெடுத்தல்: திருமணம் செய்து கொண்ட அடுத்த வினாடியே நீங்கள் பல விஷயங்களுக்கு அதிபதியாகி விடுகிறீர்கள். பணம்,நகை,உடை, சொந்த பந்தங்கள் இவற்றில் முக்கியமானவை. இதை விட மிகவும் முக்கியமானது, உங்களது வாழ்க்கைத் துணை என்பதை மறந்து விட வேண் டாம்.
 
ஆம், இனி உங்களுடன் ஆயுள் முழுக்க இன்ப துன்பங்களில் பங்கேற்பவர் அவர்தானே?… இதனால் ஒரு நல்ல தாயாக, ஒரு சிறந்த தந்தையாக அல்லது உங்களது குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக என்று பல விஷயங்களில் நீங்கள் பிரகாசிக்க வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு உங்களுக்கு அவசியம் தேவை.

எனவே தினமும் காலையில் எழுந் ததும் இருவரில் யாராவது ஒருவர் நெற்றியில் முத்தம் கொடுப்பதன் மூலம் அன்றைய பொழுதினை நல்லவிதமாக தொடங்கலாம். இன்னும் ஆழமான அன்பைக் காட்டவேண்டும் என்றால் மார்பிலோ அல்லது உதட்டிலோ முத்தம் கொடுக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணைவர் நல்ல குஷி மூடில் இருந்தால் செல்லமாக காதைப் பிடித்து திருகக் கூடச் செய்யலாம்.
 
உங்களின் கனவுகள், வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் ஆகியவற்றை மனம் விட்டு பேசுங்கள். அப்போதுதான் மனச் சுமை பாதியாக குறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.

நல்ல விஷயமோ, கெட்டதோ எந்தவொரு பிரச்சினைக்கும் தன்னிச்சையாக முடிவை எடுக்க வேண்டாம். உங்களின் துணைவரோடு கலந்து ஆலோசியுங்கள். அவர் சொல்வதில் உள்ள நன்மை, தீமைகளை அமைதியாக அலசுங்கள். பின்னர் முடி வெடுங்கள். பிரச்சினையை ஏற் படுத்தக் கூடிய முடிவுகள் என்றால் சற்று தாமதமாக நிதானமாக யோசித்து முடிவெடுப்பதில் தவறில்லை.

குழந்தைகளை திட்டமிடல்: உங்களுக்கு ஒரு குழந்தை போதுமா, இரண்டு குழந்தைகள் வேண்டுமா? என்பதை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். முதல் குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே இதில் நீங்கள் தீர்மானமாக இருக்கவேண்டும்.

இரண்டு குழந்தைகளைப் பெற்றால் எதிர்காலத்தில் அவர்களது கல்விச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றை உங்களது வருமானத்தின் மூலம் ஈடுகட்ட முடியுமா? என்பதை நன்கு ஆலோசித்துக் கொள்ளுங்கள். பெரும்பாலானவர்கள் முதல் குழந்தையை வேகமாக பெற்றெடுத்து விடுவார்கள்.அவர்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதற்குள் இரண்டாவது குழந்தையும் பிறந்து விடும்.
இது மாதிரியான நிலைமை ஏற்படாமல் தடுக்க முதல் குழந்தை பெறுவதற்கு முன்பாகவே புதுமணத் தம்பதிகள் இதைப் பற்றி ஒரு தெளிவான முடிவை எடுப்பது அவசியம்.

இதற்காக இருவரும் வெட்கமோ, சங்கடமோ படத்தேவையில்லை. குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் மட்டும் மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடக்காமல் நீங்கள் இருவரும் ஒருமித்ததொரு முடிவிற்கு வாருங்கள்.

பணம்,சொத்துசேமிப்பு: ஆடம்பரமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைத் தொடங்கும் பெரும்பாலான தம்பதிகள் கடைசிவரை தங்களது வாழ்க்கை சொகுசாகவும் பகட்டாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
 
ஆனால் குடும்பத்தை நடத்து வதற்கு முதல் காரணியாக இருப்பது பணம் தான் என்பதை தம்பதிகள் உணரவேண்டும். பணத்தை சரியான முறையில் கையாண்டால் மட்டுமே உங்களால் சொத்து சேர்ப்பது பற்றி சிந்திக்க முடியும். குறுகிய காலம் ஆடம்பரமாக வாழ்ந்து பணத்தை இழப்பதை விட சிக்கனமாக வாழ்ந்து ஆயுள் காலம் வரை நிம்மதியாக வாழ்வது எவ்வளவோ மேல்.
வங்கி கணக்கு, இன்சூரன்ஸ் பாலிசிகள்,ஆபரணச் சேர்க்கை, நிலம்-வீடு வாங்குதல் எல்லாமே உங்களின் சேமிப்பைப் பொறுத்த விஷயம்.

குடும்ப நிர்வாகத்தில் பணத்தை செலவிடும்போதும், சேமிக்கும்போதும் ஒருவரே தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். அன்றாடம் எவ்வளவு செலவு குடும்பத்திற்கு எற்படுகிறது, இன்னும் என்னென்ன மாதிரியான செலவுகள் வரலாம் அவற்றைச் சமாளிப்பது எப்படி என்பதையெல்லாம் புதுமணத் தம்பதிகள் மனம் விட்டுப் பேசிடவேண்டும்.
 
வங்கியில் பணத்தைச் சேமிக்கும்போது வாழ்க் கைத்துணைவரது பெயரையும் இணைத்துக் கொள்ளும் பழக்கம் இன்று வேகமாக பரவிவருகிறது. இதுவும் ஒரு நல்ல அம்சம்தான்.

இந்த 5 முக்கிய அம்சங்களையும் புதுமணத் தம்பதிகள் புறக்கணிக்காமல் நடந்தால் அவர்களின் வாழ்க்கை முறை மற்ற வர்களால் போற்றப்படுவது நிச்சயம்.

Leave a Reply