கணினியை இயக்குதவற்கு தேவையான முக்கிய பாகங்களில் ஒன்றான “மௌஸ்” என்ற சாதனத்தைக் கண்டுபிடித்த டொக் எங்கல்பர்ட் கடந்த 2ஆம் திகதி அவரது 88ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.
டொக் மரணமடைந்த செய்தியினை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள மௌண்டெய்ன் வீவ் எனுமிடத்தில் அமைந்துள்ள கணினி வரலாற்று அருங்காட்சியகமே உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அருங்காட்சியத்திற்காக டொக், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் தனது சேவையினை வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது 88ஆவது வயதில் டொக் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அருங்காட்சியக நிர்வாகம் கூறுகையில், டொக் மரணமடைந்த செய்தியை புதன்கிழமையே அவரது மகள் ஈ-மெய்ல் மூலம் எமக்கு தெரியப்படுத்தினார். இதில் அவரது மரணத்திற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
1950 மற்றும் 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரிய ஒரு அறையை நிரப்பிக்கொண்டிருந்த கணனியை சுருக்கமாக அமைத்த பெருமை இவருக்கே உண்டு.