தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவர் டாக்டர் இளையராஜா. “இளையராஜா டெண்டிஸ்ட்” என்ற பெயரில் சமூக வலைத்தளங்களிலும் சுவாரஷ்யமான தகவல்களையும் கருத்துகளையும் எழுதி வருபவர்.
நேற்று தனது கிளினிக்கில் சிகிச்சை பெற வந்த நபரை அவரின் மனைவி ஓங்கி அடித்துவிட்டு வெளியேறிய சம்பவம் குறித்து அவர் எழுதிய பதிவும் தெரிவித்த கருத்துக்களும் இங்கே:
ஒரு கணவனும் மனைவியும் நேற்று எனது கிளினிக்குக்கு பல் கழற்ற வந்தார்கள். கணவரை பரிசோதித்துப் பார்த்த பின்னர் அந்த பல்லை எடுத்து விடவேண்டும் என்று சொன்னேன்.
அவர் மனைவி சரி எடுத்துடுங்க டாக்டர்னு சொன்னார். நானும் ஊசி போட போனேன். ”இல்லை, எனக்கு பல்லு எடுக்காதிங்க எடுக்காதிங்க ”என்று அப்பெண்ணின் கணவர் கத்தினார்.
அந்தப் பெண் ஓங்கி அவர் கணவர் முகத்துல அறைந்துவிட்டு “வீட்டு பக்கம் வந்துடாதே” என்று சொல்லிவிட்டு வேகவேகமா போய்விட்டார். எனக்கு ஒன்னும் புரியல…என்ன நடக்குது இங்க…
அந்தாளு வீட்டுக்கும் போகாம என் கிளினில் வாசல்லே பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு உட்கார்ந்து இருந்தார். அந்த அப்பாவிய நம்ம தலையில் கட்டிட்டு போயிடுச்சி. இனி நாம தான் சோறு போட்டு காப்பத்தணுமோ என்று யோசித்தேன்.
அப் பெண் தனது கணவரை அப்படி அடித்தமைக்கும் அவர் கிளினிக் வாசலிலேயே அமர்ந்திருப்பதற்கும் காரணத்தை விசாரித்தேன். இரவு முழுவதும் பல் வலியால் அவர் தனது மனைவியை உறங்க விடவில்லை என்ற கோபம் தான் காரணமாம்.
பின்னர் அவரே கிளம்பிட்டார்…வீட்டுக்கு போனதும் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ பல் எடுக்க வந்தவர், நாளைக்கு தாடை உடைந்து வராமல் இருந்தா சரி.