ஆறு கடலில் ஓடிக் கலப்பதையும், கடலலை கரையைத் தேடித் தழுவுவதையும்
அன்றாடம் பார்த்து வந்த வானம்பாடி சிந்தனையில் ஆழ்ந்தது.
உலகம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றுதான் என்றது வானம்பாடி.
அது பாடியது..
மண்ணில் இருக்கிற ஆற்றுக்கு
மண்ணில் வெறுப்பு, கடலில் ஆசை.
கடலில் இருக்கிற அலைக்கு
கடலில் வெறுப்பு மண்ணில் ஆசை.
– காசி ஆனந்தன்-