Home » கொறிக்க... » உணவு, தங்குமிட வசதிக்காக சிறை செல்ல வங்கியை கொள்ளையிட்ட நபர்

உணவு, தங்குமிட வசதிக்காக சிறை செல்ல வங்கியை கொள்ளையிட்ட நபர்

manjailசிறைவாசத்தின் சலுகைகளை அனுபவிப்பதற்காக நபரொருவர் வங்கியொன்றை கொள்ளையடித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

நிக்கி லோரன்ஸ் கார்ட்னர் (49 வயது) என்ற மேற்படி நபர் காலில் கடும் காயத்துக்குள்ளாகியதால் தனது தொழிலை இழக்கும் நிலைக்கு உள்ளாகியிருந்தார். இந்நிலையில் தான் வீடு வாசலற்று அநாதரவான நிலையில் வாழ்வதை தவிர்க்கும் முகமாக சிறை செல்வதற்கு தீர்மானித்துள்ளார்.

அவர் கடந்த திங்கட்கிழமை அலபாமா நகரிலுள்ள மோல்டன் எனும் இடத்திலுள்ள வங்கியில் நுழைந்து காசாளரை அச்சுறுத்தி 4000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை பெற்றுக் கொண்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் வங்கிக்கு வெளியே நிறுத்தப்பட்ட காரில் பணத்தை வைத்து மூடிய லோரன்ஸ் பொலிஸார் வரும் வரை வங்கிக்கு வெளியிலிருந்த இருக்கையில் காத்திருந்துள்ளார்.

வங்கியில் கொள்ளை முயற்சியின் போது தான் ஆயுதங்களை வைத்திருப்பதாக லோரன்ஸ் அச்சுறுத்திய போது அவரை பொலிஸார் கைது செய்த போது அவரிடம் எதுவித ஆயுதங்களும் ?? இருக்கவில்லை

தற்போது லோரன்ஸ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர் தனக்காக வாதிடுவதற்காக சட்டத்தரணிகள் எவரையும் இதுவரை ஏற்பாடு செய்யவில்லை என மோல்டன் பொலிஸ் தலைவர் லின்டன் மல்வோர்டர் தெரிவித்தார்.

உணவு மற்றும் தங்குமிட வசதியை பெறுவதற்காக சிறை சென்றுள்ள லோரன்ஸ் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவிக்க மாட்டார் என்றே கருதுவதாக அவர் மேலும் கூறினார்.

Leave a Reply