Home » கொறிக்க... » நறுக்குகள் » குனிவு

குனிவு

குனிந்த தலை குனிந்தபடியே மூட்டை சுமந்துசெல்லும் கழுதையை வேம்பில் இருந்த காக்கைகள் கவனித்து வந்தன.

ஒருநாள் காக்கைகளில் ஒன்று மற்றதைப் பார்த்து. இந்தக் கழுதைமேல் உனக்கு இரக்கம் வரவில்லையா எப்போது பார்த்தாலும்

மூட்டை சுமந்து துன்பப்படுகிறதே…. என்று சொல்லிப் பெருமூச்சு விட்டது.

நாம் என்ன செய்ய முடியும். கழுதைதான் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும. என்றது மற்ற காக்கை.

ஏன் அப்படிச் சொல்கிறாய்

இறக்கைகளைக் கோதிக்கொண்டே இரண்டாம் காக்கை சொன்னது.

குனிந்துகொண்டே இருப்பவன்
சுமந்து கொண்டே இருப்பான்..

– காசி ஆனந்தன்-

Leave a Reply