Home » இது எப்படி இருக்கு? » விவாகரத்து செய்வதை விட கணவரை கொலை செய்வது இலகுவானது எனக் கூறிய இளம் பெண் நெருக்கடியில்

விவாகரத்து செய்வதை விட கணவரை கொலை செய்வது இலகுவானது எனக் கூறிய இளம் பெண் நெருக்கடியில்

julia1தனது கணவரை விவாகரத்து செய்வதைவிட கொலை செய்வது இலகுவானது எனத் தீர்மானித்து கொலைக்குத் திட்டமிட்ட அமெரிக்க பெண்ணொருவர் 30 வருடகால சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான ஜூலியா மேர்பெல்ட் எனும் பெண்ணே தனது கணவரை கொலை செய்யத் தீர்மானித்தார்.

இக்கொலையை செய்வதற்காக கூலிக்கு கொலை செய்யும் ஒருவருடனும் பேரம் பேசினார் ஜூலியா. ஆனால் தன்னுடன் பேரம் பேசியவர் உண்மையில் மாறு வேடத்திலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் என்பதை ஜூலியா அறியவில்லை.

தற்போது இக்கொலை முயற்சி குற்றச்சாட்டை நீதிமன்றில் ஒப்புகொண்டுள்ள ஜூலியாவுக்கான தண்டனை இம்மாதம் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

27 வயதான தனது கணவர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டு இறந்துவிட்டதாக கூறுவதன் மூலம் கணவரின் காப்புறுதியிலிருந்து 4 இலட்சம் டொலர்கள் தனக்கு கிடைக்கும் எனவும் ஜூலியா மேர்பேல்ட் எதிர்பார்த்திருந்தார். அதில் 50,000 டொலர்களை கொலையாளிக்கு வழங்க அவர் முன்வந்தாராம்.

ஜூலியா பணியாற்றும் நிறுவனத்தின் சக ஊழியர் ஒருவர், இக்கொலைத் திட்டம் குறித்து அறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

julia2அதையடுத்து பொலிஸ் புலனாய்வு உத்தியோகஸ்தர் ஒருவர் கொலையாளி போல் நடித்து ஜூலியாவை தொடர்பு கொண்டார்.

அவரை கடந்த ஏப்ரல் மாதம் ஜூலியா இரு தடவை வாகனமொன்றில் சந்தித்து கலந்துரையாடினார். இக்கொலைக்கு 100 டொலர் முற்பணம் வழங்கவும் பின்னர் 50,000 டொலர்களை தருவதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார்.

தான் கணவரிடமிருந்து பிரிய விரும்புவதாகவும் அவரை விவாகரத்து செய்வதைவிட கொலை செய்வது இலகுவானது எனவும் ஜூலியா கூறியுள்ளார்.

அப்பொலிஸ் உத்தியோகஸ்தர் அனைத்து உரையாடல்களையும் வீடியோவில் பதிவுசெய்ததை ஜூலியா அறியவில்லை. பின்னர் ஜூலியா கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டபோது தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.

Leave a Reply