சிவபெருமானும், மனைவி பிள்ளைகளாக இருந்து இணையத்தில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது அங்கே தோன்றிய நாரதர் தன்கையில் இருந்த அருங்கனியான மாங்கனியைக்காட்டி இறைவா நான் உங்களுக்கு இந்த மாங்கனியை அளிப்பதற்க்கு கொண்டு வந்துள்ளேன் என்றார் உடனே அதை பெற்றுக் கொண்ட சிவன் தன் மகன்கள் அருகில் இருப்பதைக்கண்டு அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க நினைத்தார் உடனே நாரதர் இது இலங்கையிலிருந்து கொண்டு வந்த மாங்கனி அங்கே இருப்பவர்கள் எதையும் பிரித்துக் கொடுக்க சம்மதிக்க மாட்டார்கள் ஆகவே இதையும் பிரித்துக் கொடுக்க கூடாது என்றார் உடனே சிவபெருமானுக்கு குழப்பமாகிப் போய்விட்டது அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது பார்வதி ஏதோ சிவன் காதில் குசுகுசுத்தாள் உடனே சிவன் முகமலர்ச்சியுடன் இரு பிள்ளைகளையும் கூப்பிட்டு யார் முதலிலே உலகைச்சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இந்த மாங்கனி என்றார் பிள்ளையார்.
தனது பழைய உபாயத்தை பயன்படுத்தி அம்மையும் அப்பனுமே முன்னறி தெய்வம் எனக் கூறிக் கொண்டு சிவனையும் உமையையும் சுற்றி வந்தார் ஆனால் முருகன் முன்பு மாதிரி மயிலில் ஏறியோ அல்லது ரொக்கட்டில் ஏறியோ பறக்கவில்லை அரட்டை அடித்ததை திருத்திவிட்டு உடனே தினசரி.com இணையத்தளத்தினுள் நுழைந்தான் முருகன் அதைக்கண்ட சிவபெருமான் பேஸ் பேஸ் இருந்த இடத்திலிருந்தே உலகை சுற்றி வந்து விட்டாய் எனக் கூறி மாங்கனியை முருகனுக்கு வழங்கினார் அதற்கு விளக்கமும் கூறினால் அம்மையும் அப்பனையும் சுற்றுவது அந்தக் காலத்துக்கு பொருந்தும்(பழைய) இந்தக்காலத்தில் உலகவிடயங்களும் உள்ளடக்கிய தினசரி.com இணைப்புத்தளத்துக்கு செல்வதே சிறந்தது ஆகவே என் தீர்ப்பு.