Home » காதல் » என்னங்க..! ஏன்னா!

என்னங்க..! ஏன்னா!

என்னை நீ
என்னங்க
ஏன்னா..!
என்று அழைக்கும்போது…
சொல்லா அது?
ஜலதரங்கம்- ஒரு
சொல்- பலபொருள்!
 
படுக்கையில்
கிடக்கும் போது
பாய்ந்தது அந்தச்சொல்!
 
மணி எட்டு
மனிதனுக்கு
இன்னுமா தூக்கம்?
எழுங்கள்䤠குளியுங்கள்!
ஏடு படியுங்கள்
நடவுங்கள்- விரைவில்
நாழி ஆயிற்று!
ஏ…அப்பா…
என்னங்க என்றால்
இத்தனையா-
இத்தனையா?
 
எங்கோ பார்த்திருப்பேன்
‘என்னங்க” என்பாய்!
பேசுகிறேன்- பல நிமிடம்
பகல் கனா- என்ன?
பதிலைச் சொல்லுங்கள்
பணம் உண்டா?
‘பர்சில்” காணோமே?
 
விழிபெயர்க்கும்
வினாக்கள் புதைத்த
‘என்னங்க” என்பது
இது தானோ…?
 
உளறிக்கொண்டிருப்பேன்
உற்றார் நண்பர்களிடம்!
கதவு ஓரத்தில் இருந்து
காது துழைக்கும்
‘என்னங்க”
 
இங்கே வாங்க கொஞ்சம்!
இன்னது பேசுவது
என்றில்லையா?
நாளைக்குக் கேலிவரும்!
 
அன்றொருநாள்- உனை
அழகுபடுத்தி- என்
அருகே படுத்திருப்பாய்!
அப்பாவி நானோ
அலைச்சலில் துவண்டு䤠
அரைத்தூக்கம் போடும் போது…
 
‘என்னங்க”
எனும் அழைப்பு-
இரவுச் சங்கீதத்தில்
இனிமைச் சங்கதி!
 
பூவும் பொட்டுமாய்
பூவுலகில் உனைவிட்டு
காலில்லாம் கட்டிலில்
கால் நீட்டி கண்மூடி
நாலுபேர் தூக்க
நான் ‘போகும்” போது…
 
‘என்னங்க”
என்பாயே…!
எட்டுத்திசையும்- உன்
கூந்தல் மலர்
குதறி எறிவாயே!
அந்த ஒரு ‘என்னங்க”
மட்டும்
இந்தப் பாவியின் காதில்
எட்டாதே?

அடியார்-

Leave a Reply