Home » இது எப்படி இருக்கு? » புற்று நோயால் பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னுக்கு ஆத­ர­வாக மொட்­டை அடித்­துக்­கொண்ட முன்னாள் அமெ. ஜனா­தி­பதி

புற்று நோயால் பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னுக்கு ஆத­ர­வாக மொட்­டை அடித்­துக்­கொண்ட முன்னாள் அமெ. ஜனா­தி­பதி

bushபுற்­று­நோயால் பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னுக்கு ஆத­ரவு­ அளிக்கும் வித­மாக அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோர்ஜ் எச்.டபிள்யு. புஷ் மொட்டை அடித்­துள்ளார். இச்­சம்­பவம் அமெ­ரிக்­காவில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இர­க­சிய உளவு அமைப்பை சேர்ந்த அதி­காரி ஒரு­வரின் 2 வயது மகன், புற்­று­நோயால் பாதிக்­கப்பட்டு சிகிச்சை பெற்று வரு­கிறான். சிகிச்­சையின் கார­ண­மாக சிறு­வனின் தலை முடி கொட்டி வரு­கி­றது. இதனால் சிறுவன் வருத்­தப்­பட்டு சோகத்தில் ஆழ்ந்­துள்ளான்.

சிறு­வனின் சோகத்தைப் போக்க ஜோர்ஜ். எச்.டபிள்யு.புஷ் தானும் மொட்­டை­ய­டித்துக் கொண்­டுள்ளார். இதற்கு காரணம் 60 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் புஷ்ஷின் 4 வயது குழந்தை புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­த­துதான் என சொல்­லப்­ப­டு­கி­றது.

அண்­மையில் சுக­யீனம் கார­ண­மாக ஜோர்ஜ் எச்.டபிள்யு. புஷ் நீண்ட நாட்கள் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­து.

Leave a Reply