நீருக்கும் நெருப்புக்கும்
நொடிக்கொரு கலவரம்
பசிக்கு நீர் பருகும்
ஏழையின் வயிற்றில்
இல்லாத நிலை வந்தும்
இணைப்பிரியா நண்பனாய்
வாழ்க்கை முடியும் வரை
வயிற்றுப் பசி மட்டும்
வேருக்கு நீரின்றி
வாடிப் போகும்
வண்ண மலர்களாய்
பிச்சை கேட்க்கும்
பச்சைக் குழந்தைகள்
எத்தனை ஏகாதிப்பத்தியம்
வந்தாலும்
ஏழையின் வயிற்றுக்கு
தினம் தினம்
பசியும் பட்டினியும்
எழுதப்படாத சரித்திரமாய்
-Kali Muthu