செந்தில்: ஏண்ணே, சினிமாக்கும் சீரியலுக்கும் என்னண்ணே வித்தியாசம்?
கவுண்டமணி: அடேய் செட் டாப் பாக்ஸ் மண்டையா!! அரை டவுசர் பையா!! 6 வித்தியாசம் சொல்றேன்.. நல்லாக் கேட்டுக்கடா..
1. சீரியல்ல நடிக்கிறவங்க அழுவாங்க.. சினிமாவுல காசு போட்டு படம் எடுத்தவந்தான் அழுவான்..
2. சீரியல் பார்த்து பொம்பளைங்க ஊட்டுல சமைக்கக் கூட மறந்துடுவாளுங்க.. சினிமாவுல ஹீரோயினைப் பார்த்து ஆம்பளைங்க இமைக்கக் கூட மறந்துருவானுங்க..
3. சீரியல்ல முக்கால்வாசி ஒவர் செண்டிமெண்ட்டும், கொஞ்சம் காமெடியும்.. சினிமாவுல முக்கால்வாசி ஓவர் பில்டப்பும், கொஞ்சம் காம நெடியும்..
4. சீரியல்ல நடிக்கிறவன் அடுத்த முதல்வர் நாந்தான்னு சொல்லிட்டுத் திரிய மாட்டான். சினிமாவுல நடிக்கிறன்ற பேர்ல கொள்ளைப்பயலுக அடுத்த முதல்வர், அடுத்த அமெரிக்க ஜனாதிபதின்ற ரேஞ்சுக்கு அறிக்கை உடுவானுங்க, படம் ரிலீஸாகாது..
5. சீரியல்ல வில்லனோ, வில்லியோ பேசியே கொல்லுவாங்க.. சினிமா ஹீரோதான் பஞ்ச் டயலாக் பேசியே கொல்லுவான்..
6. கடைசியா சொல்றேன் கேட்டுக்க, சீரியல்ல ஹீரோன்றவன் டம்மிப் பீஸு…
சினிமாவுல நடிக்கிற ரொம்ப ஹீரோக்கள் காமெடிப் பீஸுடா!!, லெக்பீஸு மண்டையா…
– Vasanth.