நமக்குத் தெரிந்தது சாதம்தான். அதை மட்டுமே உணவு என்கிறோம். அதையே வயிறு நிரம்ப சாப்பிடுகிறோம். இது தவறு. நமது உணவை மூன்று பாகங்களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். சாதம் போன்றவை ஒரு பாகம் இருந்தால் மற்றொரு பாகம் காய்கறிகள் இருக்கவேண்டும். இன்னொரு பாகம் புரதச்சத்து தரும் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், தயிர் போன்றவை இருக்க வேண்டும். நாம் இளமையாக இருக்க இது போன்ற உணவுப் பழக்கம் ரொம்ப முக்கியம். வெறும் அரிசி சாதம், சப்பாத்தி போன்றவைகளைச் சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட்டுகள்தான் உடலில் சேர்கிறது. மற்ற விஷயங்கள் சேருவதில்லை. காய்கறிகளிலும் பழங்களிலும் வயோதிகத்தைக் குறைக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் நிறைய இருக்கின்றன. அவை நம் உடலை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.
அதேபோல் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. கொஞ்சமாய்ச் சாப்பிட்டாலே போதும்.
2. உடற்பயிற்சி கட்டாயம்:
நம் உடல் அழகாக இருக்க வேண்டும். என்று ஆர்வப்படும் அளவுக்கு அதற்காக நாம் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. தினம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றால் அதை ஏதோ ஒரு பெரிய வேலையாக பலர் கருதுகிறார்கள். அவர்கள் உடல் இளமையாக இருக்காது. ஒரு நாளில் இருக்கும் இருபத்து நான்கு மணி நேரத்தில் அரைமணி நேரம் கட்டாயம் எக்சர்சைஸ் செய்ய வேண்டும். உடலுக்கு மிதமான வியர்வை வரும்வரை பயிற்சிகள் செய்யலாம். வீட்டிலேயே ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். முதல் இரண்டு நாள் செய்வதற்குத் தயக்கமாக இருக்கும். இரண்டு மூன்று நாட்களைத் தாண்டிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கே உடற்பயிற்சியின் மீது பிடிப்பு வந்துவிடும். புத்துணர்ச்சியுடன் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்.
3. மனசையும் கவனியுங்கள்:
இளமைக்கு அடிப்படையான விஷயம் மனசு. அது சந்தோஷமா உற்சாகமாக இருக்கணும். மனசு சரியில்லைன்னா எதைச் செஞ்சாலும் இளமை வராது. உடலில் ஒரு களைப்புத் தெரியும். முதிர்வு வந்திடும். ஆனா நமக்கு இப்ப இருக்கிற சூழல்ல மனசை எப்பவும் சந்தோஷமா வச்சிக்கிறது ரொம்பக் கஷ்டமான விஷயம். அதுக்கு நமக்கு உதவுறது தியானம். தினம் அரைமணி நேரம் தியானம் பண்ணுங்க. தியானம்னதும் அது ஏதோ சாமியார்கள் செய்யற விஷயம்னு நிறையப்பேர் நினைச்சிட்டு இருக்காங்க. அப்படியில்லை. காலையில் எழுந்ததும் கண்ணை மூடி உட்கார்ந்து முன்தினம் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி யோசித்துப் பார்ப்பதுகூடத் தியானம்தான். தியானம் செய்வதால் நம் உடலில் ரத்த ஓட்டம் சீரடைகிறது. நமக்கு இளமையைக் கொடுக்கிற மெலோடோனின்ங்கிற ஹார்மோன் அதிகமா சுரக்குது.
இந்த விஷயங்கள் எல்லாம் படிக்கும்போது கஷ்டம் மாதிரி தோணலாம்.உண்மையில அத்தனை கஷ்டம் இல்ல. தேவை கொஞ்சம் முயற்சிதான்.