காதல் ஓர் இன்பமான உணர்வு..! காதலின் போது மகிழ்வான உணர்வுகளே தோன்றுகின்றன. காதலுக்காக எந்த வலியையும் காதலர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் ஏன்?
இளமையில் இதெல்லாம் சகஜமப்பா..என்று சொல்லிவிட முடியாது.
இதற்கு மருத்துவ ரீதியான காரணங்களும் உள்ளன. கவனமாகக் கேளுங்கள்.
காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் போது, நெஞ்சு படபடப்பு, கைகால்கள் வியர்த்தல், வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல, மயிர்க்கூச் செறிவது போல உணர்வுகள், அர்த்தமில்லாத சொற்களைப் பேசிக் கொண்டு,, மொத்தத்தில் ஏதோ நடக்கிறது, இதமாய் இருக்கிறது.. இறக்கை முளைக்கிறது… இதயம் பறக்கிறது என்பீர்கள்.
இப்படி காதல் உணர்வுகள் மூளையில் தொடர்ச்சியான ஒரு சங்கிலி உணர்வு போன்ற ரசாயன மாற்றங்களை உண்டாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது மனதளவிலும், உடலளவிலும் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. மூளையின் செய்தி மற்றும் தொடர்பு பரிமாற்ற வேலைகளுக்கு மட்டும் 100 பில்லியன் நியூ ரான்களுக்கு மேல் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர நியூரோ பெப்டைட்ஸ் என்ற அமிலங்கள் உடல் முழு தும் உள்ளன. இவற்றின் உதவியால் உணர்வுகள் மூளை வரை எடுத்துச் செல்லப்பட்டு, விளைவு களை உண்டாக்க உறுப்புகளுக்கு கடத்தப்படுகின்றன. தற்போது உடலில் அறுபதுக் கும் மேற்பட்ட நியூரோ பெப்டைட்ஸ் அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நமக்கு வருத்தமோ, மகிழ்வோ, காதலோ உண்டாகும்போது அந்த உணர்வுகளை இந்த அமிலங்கள் தான் எடுத்துச் செல்கின்றன. பிரான்சிஸ் கிரிக் மற்றும் அவரது சகாக்கள் ஆராய்ச்சி செய்து இந்த கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள்.
நரம்புச் செல் கூட்டத்தின் தொகுதியில் உண்டாகும் செயல்விளைவுகள்தான், நமது எண்ணங்களின் தொகுதி என இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
காதலின்போது பெனில்எதிலமைன் என்ற ரசாயனப் பொருள் மகிழ்ச்சியைத் தூண்டுகிறது. இதுதான் இதயத்தைப் பறக்க வைக்கிறது. அந்த நேரத்தில் படபடப்பு ஏற்படுகிறதே ஏன் தெரியுமா?
அட்ரீனலின் சுரப்பி அதிகமாகச் சுரந்து விடுகிறது. இதனால் படபடக்க ஆரம்பித்து விடுகிறது.
காதலிக்கும்போது எண் டார்பின் என்ற ரசாயனப் பொருள் அதிகமாகச் சுரப்பதால் வலியை மறக்கச் செய்கிறது. இதனால் தான் காதலின்போது விதவிதமான உணர்வுகள் தோன்றுகின்றன என்கிறார்கள். உங்களுக்கு எப்படி என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.